“டிஜிட்டல் ஆளுமையில் சிறந்த மாநிலம்”: தமிழக அரசுக்கு விருது வழங்கினார் ராம் நாத் கோவிந்த்!!

மிக குறுகிய காலத்தில் பல துறைகளின் ஏராளமான பணிகள் மற்றும் செயல்முறைகளை தமிழக அரசு டிஜிட்டல் முறையில் செய்யத் தொடங்கி அதில் நல்ல பயன்களைக் கண்டு வருகிறது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 31, 2020, 10:29 AM IST
  • டிஜிட்டல் ஆளுமையில் சிறந்த மாநிலத்திற்கான விருதை பெற்றது தமிழகம்.
  • டிஜிட்டல் இந்தியா 2020 – தங்கம் வென்றது தமிழகம்.
  • பரிசை குடியரசுத் தலைவர் வழங்கினார்.
“டிஜிட்டல் ஆளுமையில் சிறந்த மாநிலம்”: தமிழக அரசுக்கு விருது வழங்கினார் ராம் நாத் கோவிந்த்!! title=

"டிஜிட்டல் ஆளுமையில் சிறந்த மாநிலம் / யூடி" என்ற பிரிவின் கீழ் தமிழகம் டிஜிட்டல் இந்தியா -2020 தங்க விருதை வென்றுள்ளது.

புதன்கிழமை நடைபெற்ற டிஜிட்டல் இந்தியா விருது -2020 மெய்நிகர் விருது வழங்கும் விழாவில், இந்த விருதை குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் வழங்கினார்.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

“புதுமையான டிஜிட்டல் தீர்வுகளை முன்னிறுத்தி அவற்றை அனைத்து அரசு நிறுவனங்களும் பின்பற்றுவதை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டு, டிஜிட்டல்இந்தியா விருதுகள் இந்திய தேசியஇணையத்தில் நிறுவப்பட்டுள்ளன.

சுகாதாரம், தொழிலாளர், நிதி, சமூக நீதி மற்றும் சுற்றுச்சூழல் போன்ற துறைகளில் நீடித்த வளர்ச்சி இலக்குகளை அடையும்பொருட்டு, விரிவான டிஜிட்டல் தொழில்நுட்பங்களை உபயோகிப்பதில் முன்னோடி முயற்சிகளைகொண்டுள்ள மாநிலம் மற்றும்யூனியன் பிரதேசங்களுக்கு இவ்விருதுகள் வழங்கப்படுகின்றன.

நம்பிக்கை இணையம், இயந்திர கற்றல், செயற்கை நுண்ணறிவு, பல்பொருள் இணையம், இயற்கை மொழி செயலாக்கம், குரல் பயனர்இடைமுகம், பெரிய தரவு மற்றும்பகுப்பாய்வு, மெய்நிகர் உண்மை போன்ற வளர்ந்துவரும் தொழில்நுட்பங்களும் மதிப்பீடு செய்யப்படுகின்றன.

இந்நிலையில், ‘டிஜிட்டல் ஆளுமையில் சிறந்த மாநிலம்’ என்ற பிரிவில் ‘டிஜிட்டல் இந்தியா- 2020 தங்க விருதை’ இந்த ஆண்டு தமிழகம் (Tamil Nadu) பெற்றுள்ளது. இந்த விருதைநேற்று நடைபெற்ற டிஜிட்டல் இந்தியா-2020 விருதுகள் வழங்குவதற்கான மெய்நிகர் விழாவில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் (Ram Nath Kovind) வழங்கினார்.

இவ்விழாவில், மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் (Ravi Shankar Prasad), தகவல் தொழில்நுட்பத் துறை செயலர் அஜய் பிரகாஷ் ஷானே, தேசிய தகவலியல் மையதலைமை இயக்குநர் நீட்டா வர்மா,தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை செயலர் ஹன்ஸ்ராஜ் வர்மா, தமிழ்நாடு தேசிய தகவலியல் மைய தொழில்நுட்ப இயக்குநர்கள் எம்.பாலசுப்பிரமணியன், ஜே.அருண்குமார், டி.ஈஸ்வரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.” என்று கூறப்பட்டுள்ளது.

ALSO READ: ADMK vs BJP: முதல்வர் வேட்பாளரை நாங்கள் தான் முடிவு செய்வோம் -பாஜக உறுதி

இந்து சமய அறநிலையத்துறையின் கோவில் மேலாண்மை திட்டம் குறித்த மென்பொருள் முன்மாதிரியான தயாரிப்பு என்ற பிரிவில் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துக்கு ‘டிஜிட்டல் இந்தியா-2020 வெள்ளி விருது’ வழங்கப்பட்டது. தமிழக அரசு (Tamil Nadu Government) சார்பில் இந்த விருதை, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் பெற்றுக்கொண்டார்.

இந்த விருது தமிழகத்துக்கு கிடைத்துள்ள மிகப்பெரிய பெருமையாகும். மிக குறுகிய காலத்தில் பல துறைகளின் ஏராளமான பணிகள் மற்றும் செயல்முறைகளை தமிழக அரசு டிஜிட்டல் முறையில் செய்யத் தொடங்கி அதில் நல்ல பயன்களைக் கண்டு வருகிறது. இந்த விருது அதற்கு கிடைத்த நல்ல அங்கீகாரமாகும். இந்த திசையில் மேலும் முனைப்புடன் செயல்பட இந்த விருது ஒரு ஊக்கமாக இருக்கும் என்று கூறினால் அது மிகையாகாது. 

ALSO READ: தமிழகத்தில் பாஜகவை வலுப்படுத்த ரஜினிகாந்திடம் "ஆதரவு" கேட்போம் BJP நம்பிக்கை

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News