தகுதி அடிப்படையிலான தரவரிசைகளை ஒதுக்கீடு செய்வதற்காக தமிழ்நாட்டின் தொழில்நுட்ப கல்வி இயக்குநரகம் (DoTE) 2020 ஆம் ஆண்டிற்கான TNEA ரேண்டம் எண்களை (Random Numbers) வெளியிட்டுள்ளது. இந்த ரேண்டம் எண்கள் 10 இலக்க எண்ணைக் கொண்டிருக்கின்றன. மேலும் தகுதித் தேர்வில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மாணவர்கள் ஒரே மதிப்பெண்களைப் பெற்றால், டை-பிரேக்கராக செயல்பட மாணவர்களுக்கு இவை ஒதுக்கப்படுகின்றன.
தமிழ்நாடு பொறியியல் சேர்க்கைக்கு (TNEA) விண்ணப்பித்தவர்கள் தங்களது பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் ஐடியில் இந்த ரேண்டம் எண்களைப் பெற்றிருப்பார்கள். TNEA –வின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான https://www.tneaonline.org/ -கு சென்றும் மாணவர்கள் இந்த எண்களைச் சரிபார்க்கலாம்.
1.1 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பொறியியல் சேர்க்கைக்கு விண்ணப்பித்துள்ளதாகவும், தரவரிசை பட்டியல் (Rank List) செப்டம்பர் 7 ஆம் தேதி வெளியிடப்படும் என்றும், பொது ஒதுக்கீட்டிற்கான ஆன்லைன் ஆலோசனை (Online Counselling) செப்டம்பர் 17 முதல் அக்டோபர் 6 வரை நடத்தப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இணையதளத்தில் TNEA ரேண்டம் எண்களை எவ்வாறு செக் செய்வது என பார்க்கலாம்:
• Step 1: tneaonline.org –கு செல்லவும்.
• Step 2: லாக்-இன் செய்ய மின்னஞ்சல் ஐடி மற்றும் Password-ஐ உள்ளிடவும்
• Step 3: TNEA ரேண்டம் எண் திரையில் தோன்றும்
• Step 4: எதிர்கால குறிப்புக்காக இதை பிரிண்ட் எடுத்துக்கொள்ளவும்.
இந்த ஆண்டு, பதிவுகளின் எண்ணிக்கை 20 சதவீதம் அதிகரித்துள்ளது. இருப்பினும், மறு மதிப்பீட்டிற்குப் பிறகு புதுப்பிக்கப்பட்ட மதிப்பெண்களைப் பெறாததால் பல மாணவர்களால் சான்றிதழ்களைப் பதிவேற்ற முடியவில்லை. இருப்பினும், மாணவர்கள் தற்காலிக மதிப்பெண்களைப் பதிவேற்ற அனுமதிக்கப்பட்டனர்.
TNEA என்பது முற்றிலும் ஒரு ஆன்லைன் செயல்முறையாகும். பதிவு முதல் உறுதிப்படுத்தல் வரை அனைத்து நடவடிக்கைகளும் ஆன்லைனில் நடத்தப்படுகின்றன. சான்றிதழ் சரிபார்ப்பும் ஆன்லைனில் செய்யப்படும் என்று வேட்பாளர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் TFC மையத்திற்கு செல்ல வேண்டாம் என்று அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இருப்பினும், விளையாட்டு பிரிவில் பதிவுசெய்யப்பட்ட மாணவர்கள், சரிபார்ப்புக்காக மையத்திற்கு செல்ல வேண்டி இருக்கும். மையத்திற்குள் நுழைவதற்கு முன்பு முகக்கவசங்கள் அணிவது, சானிடிசர்களைப் பயன்படுத்துவது உள்ளிட்ட COVID-19 வழிகாட்டுதல்களைப் பின்பற்றுமாறு அவர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
ALSO READ: TNEA: சான்றிதழ்களை பதிவேற்றுவதற்கான காலக்கெடு நீட்டிப்பு!!