குறிப்பிட்ட பொறியியல் படிப்புகளில் சேர 12-ம் வகுப்பில் இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதம் ஆகிய பாடங்களை படித்திருக்க வேண்டியது கட்டாயமில்லை என அகில இந்திய தொழில்நுட்பக் கவுன்சில் அறிவித்துள்ளது.
தகுதி அடிப்படையிலான தரவரிசைகளை ஒதுக்கீடு செய்வதற்காக தமிழ்நாட்டின் தொழில்நுட்ப கல்வி இயக்குநரகம் (DoTE) 2020 ஆம் ஆண்டிற்கான TNEA ரேண்டம் எண்களை வெளியிட்டுள்ளது.
பொறியியல் சேர்க்கை செயல்பாட்டின் ஒரு பகுதியாக அசல் சான்றிதழ்களைப் பதிவேற்ற முயற்சிக்கும் போது பல மாணவர்கள் சிக்கல்களை எதிர்கொண்டுள்ள நிலையில், தொழில்நுட்ப கல்வி இயக்குநரகம் (DoTE) இதற்கான காலக்கெடுவை நான்கு நாட்கள் நீட்டித்துள்ளது.
பொறியியல் படிப்பின் கலந்தாய்வு இன்றுடன் நிறைவு பெறுகிறது.
அண்ணா பல்கலைக்கழகத்தில் தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பொறியியல் கல்லூரிகளுக்கான கலந்தாய்வு நடத்தி வருகிறது. நடப்பாண்டின் பொறியியல் கலந்தாய்வு, ஜூலை 17-ம் தேதி தொடங்கியது.
பொதுக் கலந்தாய்வு ஜூலை 23-ம் தேதி ஆரம்பித்தது. 19 நாட்கள் முடிவில் 83,562 இடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டுள்ளன. மாணவர்கள் அதிகபட்சமாக மெக்கானிக்கல் பிரிவை தேர்வு செய்துள்ளனர்.
கலந்தாய்விற்கு அழைப்பு விடுக்கப்பட்டதில், இதுவரை 46,818 பேர் பங்கேற்கவில்லை. தற்போது வரை 91,894 இடங்கள் நிரப்பப்படாமல் இருக்கின்றன.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.