Reduced syllabus: 1 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பாடத்திட்டம் குறைப்பு- அரசாணை வெளியீடு!

தமிழகத்திலும் கடந்த கல்வி ஆண்டில் வகுப்பு வாரியாக பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டு அதற்கான அட்டவணை வெளியிப்பட்டது. கிட்டத்தட்ட 50% அளவு படத்திட்டங்கள் குறைக்கப்பட்டு பாடங்கள் நடத்தப்பட்டது.  அதே போல் இந்த இந்த வருடமும் பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டுள்ளது. ...

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Aug 13, 2021, 07:44 PM IST
  • 1 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பாடத்திட்டம் குறைப்பு
  • அரசாணை வெளியிட்டது தமிழக அரசு
  • கடந்த கல்வியாண்டிலும் வகுப்புவாரியாக பாடத்திட்டம் குறைக்கப்பட்டது
Reduced syllabus: 1 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பாடத்திட்டம் குறைப்பு- அரசாணை வெளியீடு! title=

சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக அனைத்து பள்ளிகளும்  மூடப்பட்டுள்ளன. அதனால் ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்று வருகிறது. தற்போது கொரோனா இரண்டாம் அலை காரணமாக 12ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு மதிப்பீட்டு முறையிலான மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளது.

நடப்பு ஆண்டிலும் ஆன்லைன் வகுப்புகள் (Online Class) தொடர்ந்து வருகிறது. இந்த ஆன்லைன் கல்வியில் பாடங்கள் புரிவதில்லை என பெரும்பாலான மாணவர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். மேலும் அனைத்து பாடங்களையும் நடத்துவது கால விரயத்தை அதிகரிக்கிறது. அதனை தொடர்ந்து குறைவான நேரத்தில் தேர்வுக்கு தயாராவது மாணவர்களுக்கு அதிக மன அழுத்தத்தை அளிக்கிறது. ஆன்லைன் மூலம் பாடங்களை நடத்தி முடிப்பது ஆசிரியர்களுக்கு பெரும் சவாலாக இருந்து வருகிறது. 

தமிழகத்திலும் கடந்த கல்வி ஆண்டில் வகுப்பு வாரியாக பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டு அதற்கான அட்டவணை வெளியிப்பட்டது. கிட்டத்தட்ட 50% அளவு படத்திட்டங்கள் குறைக்கப்பட்டு பாடங்கள் நடத்தப்பட்டது.  அதே போல் இந்த இந்த வருடமும் பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டுள்ளது.  

ALSO READ | தமிழக பள்ளி ஆசிரியர்களுக்கு சூப்பர் செய்தி: அரசு எடுத்துள்ள நல்ல முடிவு

அந்த வகையில் 2021 மற்றும் 22 ஆம் ஆண்டிற்கான பாடத்திட்டத்திலிருந்து ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை 50 - 54 சதவீதமும், 9 முதல் 12 ம் வகுப்புகளுக்கு 60 முதல் 65 சதவீதம் பாடத்திட்டமும் குறைக்கப்படுவதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 

சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர், 9 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவா்களுக்கு செப்டம்பர் 1 முதல் பள்ளிகளைத் திறக்கலாம் என முதல்வா் அறிவித்துள்ளாா். அனைத்து மாவட்டங்களிலும் பள்ளிகளைத் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கான ஆயத்தப் பணிகள் தொடங்கியுள்ளன என்று கூறினார்.

ALSO READ: தமிழக பள்ளிக் கல்வித்துறை 10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News