PM Kisan விவசாயிகள் நலத்திட்ட ஊழலில் CBI விசாரணை தேவை: தமிழக விவசாயிகள்

விவசாயிகள் நலத்திட்டமான பிரதம மந்திரி சம்மான் நிதி யோஜனாவில் (PMKSNY) மாநிலத்தில் நடந்துள்ள ஊழலில் CBI விசாரணைக்கு உத்தரவிடுமாறு தமிழக விவசாயிகள் மத்திய அரசிடம் வலியுறுத்தியுள்ளனர்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 15, 2020, 12:14 PM IST
  • PMKSNY மூலம் கிடைக்கும் லாபங்கள், சில மாவட்டங்களில், விவசாயிகள் அல்லாதவர்களுக்கு விநியோகிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
  • 14 மாவட்டங்களில் இதுபோன்ற முறைகேடுகள் நடந்ததாக விவசாயிகள் கூறினர்.
  • சுவாமிமலை சுந்தர விமலநாதன் தலைமையிலான விவசாயிகள் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளனர்.
PM Kisan விவசாயிகள் நலத்திட்ட ஊழலில் CBI விசாரணை தேவை: தமிழக விவசாயிகள் title=

திருச்சிராப்பள்ளி: விவசாயிகள் நலத்திட்டமான பிரதம மந்திரி சம்மான் நிதி யோஜனாவில் (PMKSNY) மாநிலத்தில் நடந்துள்ள ஊழலில் CBI விசாரணைக்கு உத்தரவிடுமாறு தமிழக விவசாயிகள் (Tamil Nadu Farmers) மத்திய அரசிடம் வலியுறுத்தியுள்ளனர். ஏனெனில் மாநில அரசு அதிகாரிகள் இதில் ஒரு பகுதியாக இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது.

இந்த விவகாரத்தில் நியாயமான விசாரணை நடக்கவில்லை என்றால், இது குறித்து போராட்டம் நடத்தப்படும் என விவசாயிகள் அச்சுறுத்தியுள்ளனர். விவசாயிகளின் கூற்றுப்படி, PM Kisan திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு அளிக்கப்படும் 6000 ரூபாய் நிதி உதவியிலிருந்து, விவசாயிகள் அல்லாதவர்களின் வங்கிக் கணக்குகளுக்கு ஆகஸ்ட் 10 ஆம் தெதி 4000 ரூபாய் வரவு வைக்கப்பட்டுள்ளது. 14 மாவட்டங்களில் இதேபோன்ற முறைகேடுகள் நடந்ததாக விவசாயிகள் கூறினர்.

இந்த முறைகேடு பற்றி தெரிய வந்தவுடன், இதற்கான ஆன்லைன் போர்டல் நிறுத்தப்பட்டது. அதன் பின்னர் வேளாண் அமைச்சர் ஆர். துரைக்கண்ணு மற்றும் வேளான் துறை முதன்மைச் செயலர் ககந்தீப் சிங் பேடி ஆகியோர் பயனாளிகளின் பட்டியலை ஆய்வு செய்து, அதில் இருந்த விவசாயிகள் அல்லாதவர்களின் பெயர்களை பட்டியலிலிருந்து நீக்கினர்.

இதற்கிடையில், காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்க செயலாளர் சுவாமிமலை சுந்தர விமலநாதன் தலைமையிலான விவசாயிகள் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளனர். அதில் அவர்கள் மத்திய அரசு துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் வேளாண்மை மற்றும் வருவாய் துறைகள் மற்றும் இ-சேவா ஊழியர்கள் மற்றும் பிற முகவர்களை விசாரிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.

ALSO READ: PM Kisan விவசாயிகள் நலத்திட்டத்தில் ஊழல்: 13 மாவட்டங்களில் விசாரணை!!

முன்னதாக, விவசாயிகளின் நலத்திட்டமான பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜ்னா (PMKSNY) மூலம் கிடைத்த பிற லாபங்கள், சில மாவட்டங்களில், விவசாயிகள் அல்லாதவர்களுக்கு விநியோகிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. வேளாண் முதன்மை செயலாளர் ககன்தீப் சிங் பேடி விசாரணைக்கு உத்தரவிட்டு வியாழக்கிழமை அந்தந்த மாவட்ட ஆட்சியர்களுடன் வீடியோ மாநாடு மூலம் ஒரு சந்திப்பை நடத்தினார்.

விவசாயிகள் தங்கள் வாழ்வாதாரத்தைத் தக்கவைத்துக்கொள்ள விவசாய நடவடிக்கைகளைத் தொடர உதவும் வகையில் பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜ்னா 2018 இல் நிறுவப்பட்டது.

திருவள்ளூர் மாவட்ட கலக்டரேட் பணியாளர்கள் மற்றும் சில இடைத்தரகர்கள், பயனாளிகளின் பட்டியலில் மற்றவர்களின் பெயர்களைச் சேர்ப்பதற்கான கட்டணமாக 1,000 ரூபாய் வாங்கி இந்தச் செயலைச் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

ALSO READ: விவசாயிகள் கோரிக்கையை ஏற்று பவானிசாகர் அணையை திறந்தது தமிழக அரசு

Trending News