செல்வப்பெருந்தகை அஞ்சலி
சென்னை பெரம்பூரில் ரவுடிகளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருக்கும் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வப்பெருந்தகை அஞ்சலி செலுத்தினார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழ்நாடு முழுவதும் தலித் தலைவர்கள் மற்றும் இளைஞர்களின் பாதுகாப்பை மாநில அரசு உறுதி செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டார். உளவுத்துறையை வலிமைப்படுத்த வேண்டும் என கேட்டுக் கொண்ட செல்வப்பெருந்தகை, ஒரு தேசியக்கட்சியின் மாநில தலைவருக்கே பாதுகாப்பு இல்லை என்ற செய்தி, மிகவும் கவலையளிப்பதாக கூறினார். மற்ற மாநிலங்களோடு ஒப்பிடுகையில் தமிழ்நாட்டின் சட்டம் ஒழங்கு மோசம் இல்லை என்றாலும், அடுத்தடுத்து நிகழக்கூடிய படுகொலைகளை பார்க்கும்போது கவலையளிப்பதாகவும் கூறியுள்ளார்.
மேலும் படிக்க | ஆம்ஸ்ட்ராங் படுகொலை: 'அரசியல் பின்னணி இல்லை' - போலீசார் சொல்வது என்ன?
உளவுத்துறையை மேம்படுத்த வேண்டும்
தொடர்ந்து பேசிய செல்வப்பெருந்தகை, " ஆம்ஸ்ட்ராங் படுகொலை என்பது கண்டனத்துக்குரியது. கூலிப்படைகளை ஒடுக்க வேண்டும். கொலை செய்ததாக ஒப்புக் கொண்டு சரணடைந்தவர்களோடு விசாரணையை முடித்துக் கொள்ளக்கூடாது. இதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பதை கண்டறிய வேண்டும். ஸ்காட்லாந்துக்கு இணையாக புலன் விசாரணை செய்யகூடிய காவல்துறை என்ற பெயர் பெற்ற தமிழ்நாடு காவல்துறை உண்மைக் குற்றவாளிகளை கண்டுபிடிக்க வேண்டும். ஆருத்ரா மோசடியில் ஈடுபட்டவர்கள் இந்த கொலைக் குற்றத்தில் செய்தவர்களுடன் தொடர்புடையவர்களாக செய்திகள் வருகின்றன. அது குறித்தும் காவல்துறை விசாரணை நடத்த வேண்டும். புலன்விசாரணையை இன்னும் தீவிரப்படுத்த வேண்டும்.
உண்மை குற்றவாளிகளை கைது செய்க
11 பேரை பிடித்திருக்கிறார்கள். அவர்களுக்கு யார் உதவி செய்தார்கள், பின்னணியில் இருக்கிறார்கள் என்பதை கண்டுபிடிக்க வேண்டும். தேசிய கட்சியின் மாநிலத் தலைவரை கொல்லும் அளவுக்கான தைரியத்தை கொடுத்தவர்களை கண்டுபிடிக்க வேண்டும். தமிழ்நாட்டின் உளவுத்துறையை மேம்படுத்த வேண்டும். உளவுத்துறை சரியாக இருந்திருந்தால் இந்த கொலையை தவிர்த்திருக்கலாம். ஆண்டு ஆண்டு காலமாக ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காக போராடுபவர்களின் பாதுகாப்பை தமிழ்நாடு அரசு உறுதி செய்ய வேண்டும். ஆம்ஸ்ட்ராங்கிற்கு நினைவாலயம் கட்டும் முயற்சிக்கு நாங்களும் ஒத்துழைப்போம்" என்று தெரிவித்தார்.
ஆம்ஸ்ட்ராங் கொலை நடந்தது எப்படி?
ஜூலை 5 ஆம் தேதி ஆம்ஸ்ட்ராங் தன்னுடைய புதிய கட்டட பணிகளை பார்வையிட்டுக் கொண்டிருந்தபோது வந்த மர்ம கும்பல், அவரை வெட்டிக் கொலை செய்தது. உணவு டெலிவரி பாய் வேஷத்தில் வந்த இந்த கொலையை அரங்கேற்றியது ரவுடி கும்பல். பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் என்பதால் ஆம்ஸ்ட்ராங் கொலை தேசிய அளவில் கவனம் பெற்றது. இதனையடுத்து காவல்துறை உடனடியாக செயல்பட்டு, கொலை செய்த 11 பேரை கைது செய்தது. அவர்களிடம் நடத்திய விசாரணையில் ஆற்காடு சுரேஷ் கொலைக்கு பழிக்குப் பழியாக இந்த கொலையை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளனர். இருப்பினும் காவல்துறை புலன் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ