Tamilnadu Assembly 2024: தமிழக சட்டசபை கூட்டத்தொடர், இன்று ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் துவங்கியது. இன்னும் ஓரிரு மாதங்களில் மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளதால், ஆளுநர் ஆர்.என்.ரவி உரையில் முக்கிய அறிவிப்புகள் இருக்கும் என எதிர் பார்க்கப்படுகிறது. மேலும் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டத்தொடர் என்பதால், ஆளுநர் உரையுடன் தொடங்குகிறது.
இன்று காலை 10 மணி முதல் தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றி வருகிறார். ஆளுநர் உரைக்கு பின்னர் அலுவல் ஆய்வுக்குழு கூடி எத்தனை நாட்களுக்கு அவையை நடத்தலாம் என முடிவு செய்யும்.
ஆளுநர் உரை மீதான நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்தை 3 நாட்கள் வரை நடத்த திட்டம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி அல்லது பிப்ரவரி மாதத்தில் சட்டமன்ற கூட்டத் தொடர் ஆளுநர் உரையுடன் துவங்குவது வழக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ