தமிழ் சினிமாவின் உட்ச நட்சத்திரமாக இருக்கும் சூர்யா, திரைப்படத்தில் நடிப்பதைக் கடந்து சமூக சேவைகளிலும் ஈடுபட்டு வருகிறார். அறம் என்ற அறக்கட்டளை மூலம் ஆயிரக்கணக்கான குழந்தைகளை படிக்க வைத்துக் கொண்டிருக்கிறார். சமூகத்தில் விளிம்பு நிலையில் இருக்கும் மாணவர்கள் தேடிக் கண்டுபிடித்து மருத்துவர், வழக்கறிஞர் மற்றும் அரசுப் பணிகளுக்கு அனுப்பி வருகிறார். இதனால் நடிகர் என்ற அடையாளத்தைக் கடந்து சமூக சேவகர் என்ற உயர்ந்த அந்தஸ்திலும் மக்கள் மனதில் இடம்பிடித்து இருக்கிறார்.
மேலும் படிக்க | ரஜினி மற்றும் தோனியை ரொம்ப பிடிக்கும்! ஊர்வசி ரவுடேலா!
இந்நிலையில், அவர் அண்மையில் நாமக்கல் மாவட்டம் மேட்டுத்தெருவில் உயிரிழந்த ரசிகரின் வீட்டுக்கு சென்று அஞ்சலி செலுத்திய புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. மேட்டுத்தெருவைச் சேர்ந்த ஜெகதீஷ் என்பவர் சூர்யாவின் தீவிர ரசிகர். 25 வயதான அவருக்கு திருமணமாகி மனைவியும் கைக்குழந்தையும் உள்ளது. கடந்த 21 ஆம் தேதி துறையூர் சாலையில் இருச்சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த ஜெகதீஷ், லாரி மோதி படுகாயமடைந்தார். அவரை மீட்ட அக்கம்பக்கத்தினர் நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கிருந்து சேலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்போது, வழியிலேயே ஜெகதீஸ் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த தகவல் சூர்யாவுக்கு தெரியவர, நேரடியாக ஜெகதீஸ் வீட்டுக்கு சென்றுள்ளார். அங்கு ஜெகதீஸின் உருவப்படத்துக்கு மலர்தூவி கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தியதுடன், மனைவி உள்ளிட்ட உறவினர்களுக்கு ஆறுதல் கூறினார். சூர்யாவின் வருகையால் அப்பகுதியில் மக்கள் கூட்டம் திரண்டது.
மேலும் படிக்க | தாகத் கொடுத்த அடி - கங்கனாவின் அடுத்த அவதாரம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR