சென்னை: சென்னை தேனுபுரீஸ்வரர் கோவிலில் ஓதுவராக திருமதி சுஹஞ்சனா கோபிநாத் புதன்கிழமை (ஆகஸ்ட் 18, 2021) பொறுப்பேற்றார்.
28 வயதான சுஹஞ்சனா கோபிநாத், தேனுபுரீஸ்வரர் கோவிலின் ஓதுவார் (தேவாரம், திருவாசகம் ஓதுபவர்) ஆக மாநில அரசால் நியமிக்கப்பட்டார்.
கரூர் சுவாமிநாதன் என்று 3 ஆண்டுகள் தேவாரம் மற்றும் திருவாசகத்தைக் கற்றுக் கொண்டார் சுஹஞ்சனா. மக்களிடையே சைவத் திருமறைகளை பரப்ப விரும்புவதாக தமிழகத்தின் இரண்டாவது பெண் ஓதுவார் தெரிவிக்கிறார்.
In a pathbreaking move, the Government of Tamil Nadu has decided to appoint Female temple priests. So far this was a male bastion. Here you see the first female‘Odhuvar’/temple priest Suhanjana Gopinath,reciting ‘Thevaram’ in Tamil at a temple in Chennai. https://t.co/p57Dt9RWRy pic.twitter.com/JL8L2zk92Y
— Supriya Sahu IAS (@supriyasahuias) August 16, 2021
தற்போது பெண் ஓதுவார்களை நியமிப்பது மற்றும் அனைத்து சாதியினரும் அர்ச்சகராவது போன்ற விஷயங்களை பற்றி பேசும் சுதாகர் என்ற சிவாச்சாரியார், "இது ஒரு வேலை வாய்ப்பு அல்ல. இது ஒரு கலாச்சாரம். இதற்கான அமைப்பு ஒன்று உள்ளது. 10-15 வருடங்கள் படித்து, பயிற்சி பெற்ற பிறகு தான் ஓதுவாராக சேவையாற்ற முடியும். ஆனால் இன்று, ஒருவர் 3 மாதங்கள் அல்லது ஒரு வருடம் ஒரு படித்துவிட்டு, சான்றிதழ் பெற்று கடவுளுக்கு சேவையாற்றலாம்.
நாங்கள் கோவிலில் சிவனுக்கு சேவையாற்றுவதில் ஒரு முறையை கடைபிடிக்கிறோம். ஆனால் இப்போதெல்லாம் அந்த வரையறை ஏதும் இல்லை. அவர்களுக்கு தமிழ் அர்ச்சகர்கள் மட்டுமே தேவை, சமஸ்கிருதம் மற்றும் ஹிந்தி அல்ல" என்று கூறினார்.
"அர்ச்சகர்கள் அவ்வாறு நியமிக்கப்படக் கூடாது என்று உயர் நீதிமன்றம் (High Court) கூறியுள்ளது, ஆனால் நியமனங்கள் நடைபெறுகிறது" என்று சிவாச்சாரியார் சுதாகர் கூறினார். ஆகஸ்ட் 16 அன்று, பிராமணரல்லாத மூன்று அர்ச்சகர்கள் (archakars) நியமிக்கப்பட்டனர். மாநில அரசின் இந்து மத மற்றும் அறநிலையத்துறையின் (Hindu Religious and Charitable Endowments (HR&CE)) கீழ் இயங்கும் கோவில்களில் இவர்கள் நியமிக்கப்பட்டனர்.
Also Read | Religion vs Priest: அனைத்து சாதியினரும் அர்ச்சகராவதால் மதம் வளருமா? மதம் பிடிக்குமா?
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR