சென்னையில் இருந்து நெல்லை சென்ற வந்தே பாரத் ரயில் மீது கல் வீச்சு தாக்குதல் நடந்துள்ளது. அதிநவீன வசதிகள் கொண்ட வந்தே பாரத் ரயில்கள் நாடு முழுவதும் பல்வேறு வழித்தடங்களில் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டிலும் சென்னை – கோவை வழித்தடம், சென்னையில் இருந்து பெங்களூர் வழியாக மைசூர் மற்றும் சென்னை டூ நெல்லை வழித்தடம் மற்றும் கோவை – பெங்களூர் இடையிலான வழித்தடம் என 4 வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
வந்தே பாரத் ரயில் மீது கல் வீசப்பட்ட சம்பவம்
வந்தே பாரத் ரயில் அறிமுகப்படுதட்ட புதிதில் வட மாநிலங்களில் அவ்வப்போது இது போன்ற கல்வீச்சு சம்பவங்கள் நடைபெற்றுள்ளது. தென் மாநிலங்களில் இது போன்ற விரும்பத்தகாத சம்பவங்கள் நடைபெறாத நிலையில், நேற்று சென்னையில் இருந்து மதியம் 2.50 மணிக்கு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் நெல்லைக்கு புறப்பட்டது. இரவு 10.30 மணியளவில் வாஞ்சி மணியாச்சி அருகே சென்று கொண்டிருந்தபோது மர்ம நபர்கள் ரெயிலின் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதில் ரெயிலின் 9 பெட்டிகளின் ஜன்னல் கண்ணாடிகள் சேதமடைந்தன. ரயிலின் ஜன்னல் கண்ணாடியில் கற்கள் வீசப்பட்டதால் பயணிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். கல் வீசப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரண நடத்தி வருகின்றன
வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்களின் எண்ணிக்கையை அதிகரிக்க திட்டமிடும் ரயில்வே
இந்திய ரயில்வேயில் அதிகரித்து வரும் அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரயில்களின் தேவையை கருத்தில் கொண்டு, 2024 ஆம் ஆண்டில் நாட்டிலுள்ள 14 மாநிலங்கள் மற்றும் இரண்டு யூனியன் பிரதேசங்களில் 60 புதிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. குறிப்பிடத்தக்க வகையில், ரயில்வே 2023 இல் 34 வந்தே பாரத் ரயில்களை அறிமுகப்படுத்திய, நிலையில் இந்திய ரயில்வே நடப்பு ஆண்டில் கிட்டத்தட்ட 60 புதிய வந்தே பாரத் ரயில்களை அறிமுகம் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க | 60 புதிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களை அறிமுகப்படுத்த திட்டமிடும் இந்திய ரயில்வே!
மாநில அரசுகள் வைத்துள்ள கோரிக்கை
மாநில அரசுகள் குறிப்பாக கர்நாடகா, மகாராஷ்டிரா, தமிழ்நாடு, உத்தரபிரதேசம் மற்றும் கேரளா ஆகியவை சில வழித்தடங்களில் அறிமுகப்படுத்த இந்திய ரயில்யிடம் கோரிக்கையை வைத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
புதிய வந்தே பாரத் வழித்தடங்கள்
புதிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் குருவாயூர் - ராமேஸ்வரம், மும்பை சென்ட்ரல் - அகமதாபாத், புனே - பெலகாவி, விசாகப்பட்டினம் - திருப்பதி, டாடா நகர் - வாரணாசி, பிரயாக்ராஜ் - ஆக்ரா, லக்னோ - பாட்னா, பெங்களூரு - மங்களூரு, ராய்ப்பூர் - வாரணாசி ஆகிய வழித்தடங்களில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றன.
வந்தே பாரத் ரயில்கள் தயாரிக்கப்படும் இடங்கள்
வந்தே பாரத் ரயில்கள் ஐசிஎஃப் சென்னை தொழிற்சாலையில் முக்கியமாக தயாரிக்கப்படுகின்றன. இது தவிர, ஹரியானாவின் சோனிபட் மற்றும் மகாராஷ்டிராவின் லத்தூரிலும் வந்தே பாரத் ரயில்கள் தயாரிக்கப்படும். மேலும் ஒவ்வொரு பகுதியையும் வந்தே பாரத் ரயில்களுடன் இணைக்கும் பிரதமர் மோடியின் கனவை இது நிறைவேற்றும் என்று ரயில்வே அமைச்சர் முன்னதாக கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. முதல் வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி 2019 ஆம் ஆண்டு தொடங்கி வைத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
வந்தே பாரத் ரயிலுக்கு இணையான அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ்
ஏசி இல்லாத ரயில்களில் பயணிக்கும் பயணிகளின் தேவைகளை கருத்தில் கொண்டு, சாமான்ய மக்களுக்கான இந்திய ரயில்வேயின் அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் என்பது வந்தே பாரத்திற்கு இணையான முற்றிலும் புதிய ரயிலாகும். அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ், முன்பு வடிவமைப்பு கட்டத்தில் வந்தே சதாரண் என்று அழைக்கப்பட்டது.
மேலும் படிக்க | வந்தே பாரத்திற்கு இணையான அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ்... அசத்தலான அம்சங்கள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ