#Sterlite ஆலை ஓரிரு மாதத்தில் மீண்டும் இயங்கும் -அதிகாரி ராம்நாத்!!

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை தற்போது தற்காலிகமாக தான் மூடப்பட்டுள்ளது, ஓரிரு மாதங்களில் மீண்டும் திறக்கப்படும் என ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனத்தின் தலைமை அதிகாரி ராம்நாத் தெரிவித்துள்ளார்! 

Last Updated : Jun 8, 2018, 02:53 PM IST
#Sterlite ஆலை ஓரிரு மாதத்தில் மீண்டும் இயங்கும் -அதிகாரி ராம்நாத்!! title=

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை தற்போது தற்காலிகமாக தான் மூடப்பட்டுள்ளது, ஓரிரு மாதங்களில் மீண்டும் திறக்கப்படும் என ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனத்தின் தலைமை அதிகாரி ராம்நாத் தெரிவித்துள்ளார்! 

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி கடந்த 22-ம் தேதி 100_வது நாளாக போரட்டம் நடைபெற்றது. இதனால் மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 

இதை தொடர்ந்து காவல்துறையினருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் கண்ணீர் புகை குண்டு வீச்சு, தடியடி, துப்பாக்கிச் சூடு உள்ளிட்டவை நடத்தப்பட்டது. இந்தக் கலவரத்தில் போராட்டக்காரர்கள் சுமார் 13 பேர் உயிரிழந்தனர். மேலும், ஏராளமானோர் காயமடைந்தனர்.  

இதை எதிர்த்து பல்வேறு அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் போராட்டம் நடத்தி வந்தனர். இதையடுத்து, துப்பாக்கிசூடு விவகாரம் குறித்த விசாரணையை ஓய்வுபெற்ற முன்னாள் நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணை செய்து வருகிறார்.

இதையடுத்து, தமிழக சட்டசபை கடந்த மே மாதம் 29-ம் தேதி கூடியது. இதில், தமிழக முதலவர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு விவகாரங்கள் குறித்து அறிக்கைகளை தாக்கல் செய்தார். அதில், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுள்ளதாகவும், இனி யாரளாலும் திறக்க முடியாது என தெரிவித்திருந்தார். 

இந்நிலையில், தற்போது ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனத்தின் தலைமை அதிகாரி ராம்நாத் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை தற்போது தற்காலிகமாக தான் மூடப்பட்டுள்ளது, ஓரிரு மாதங்களில் மீண்டும் திறக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பானது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது!

 

Trending News