வெலிங்டன் நீர்த்தேக்கத்திலிருந்து வேளாண்மைக்கு தண்ணீர் திறந்து விட தமிழக முதல்வர் ஆணை

கடலூர் மாவட்டம், வெலிங்டன் நீர்த்தேக்கத்திலிருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விட தமிழக முதல்வர் ஆணையிட்டுள்ளார்.

Last Updated : Dec 22, 2017, 04:29 PM IST
வெலிங்டன் நீர்த்தேக்கத்திலிருந்து வேளாண்மைக்கு தண்ணீர் திறந்து விட தமிழக முதல்வர் ஆணை title=

கடலூர் மாவட்டம், வெலிங்டன் நீர்த்தேக்கத்திலிருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விட தமிழக முதல்வர் ஆணையிட்டுள்ளார்.

அதைக்குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:-

கடலூர் மாவட்டம், வெலிங்டன் நீர்த்தேக்கத்திலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடுமாறு வேளாண் பெருமக்களிடமிருந்து தமிழக அரசுக்கு கோரிக்கைகள் வந்துள்ளன. வேளாண் பெருமக்களின் வேண்டுகோளினை ஏற்ற தமிழக அரசு, கடலூர் மாவட்டம், வெலிங்டன் நீர்த்தேக்கத்திலிருந்து பாசனத்திற்காக 28.12.2017 முதல் 23 நாட்களுக்கு வினாடிக்கு 250 கனஅடி வீதம் மொத்தம் 491.93 மில்லியன் கனஅடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்து விட தமிழக முதல்வர் ஆணையிட்டு உள்ளார். இதனால் கடலூர் மாவட்டத்தில் 24059 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் எனவும் கூறியுள்ளார். 

மேலும், விவசாயப் பெருமக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி, நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூல் பெற வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் எனவும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

Trending News