ரம்ஜான் திருநாளையொட்டி இஸ்லாமிய மக்களுக்கு எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்!
இஸ்லாமியர்களின் புனிதப் பண்டிகையான ரம்ஜான் தினம் இன்று என ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், நாட்டின் பல்வேறு பகுதிகளில் பிறை தெரியவில்லை எனக் கூறி இன்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படவில்லை.
இந்தநிலையில், கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் பிறை தெரிந்ததாக ஹாஜி அறிவித்ததையடுத்து, ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் ரம்ஜான் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். இதையடுத்து, தமிழகத்திலும் சில பகுதியில் ரம்ஜான் திருநாளை கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில், ரம்ஜான் திருநாளையொட்டி இஸ்லாமிய மக்களுக்கு எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் வாழ்த்து கூறியுள்ளார். அதில், அன்பு, இரக்கம், கருணை, ஈகையை வெளிப்படுத்தும் இஸ்லாமியர்களுக்கு ரம்ஜான் வாழ்த்துக்கள் என்றும், மானுடத்தின் மிக உயர்ந்த பண்புகளை செயல்பாட்டின் மூலம் வெளிப்படுத்தும் இஸ்லாமிய மக்களுக்கு வாழ்த்துக்கள் என்றும் கூறியுள்ளார்.