புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகே அமைந்துள்ளது வடுகப்பட்டி. இந்தக் கிராமத்தைச் சேர்ந்த சைவராஜின் மகள் லதா அதே ஊரை சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவரை திருமணம் செய்துகொண்டார். 52 வயதான ரவிச்சந்திரன் ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றார். இந்தச் சூழலில் ரவிக்கும் அவரது மனைவிக்கும் இடையே ஓராண்டுக்கு முன்பு கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக தெரிகிறது. எனவே லதா தனது பிள்ளைகளுடன் தன் தந்தை சைவராஜ் வீட்டில் வசித்திருக்கிறார். இதற்கிடையே குடும்பப் பிரச்னையோடு மட்டுமின்றி சைவராஜுக்கும், ரவிச்சந்திரனுக்கும் சொத்து பிரச்னையும் இருந்திருக்கிறது. மேலும் ரவி - லதா விவாகரத்து வழக்கு புதுக்கோட்டை நீதிமன்றத்தில் நடந்துவருகிறது.
இந்தச் சூழலில் நேற்று விவாகரத்து வழக்கு தொடர்பான விசாரணை வந்தபோது இரண்டு பெண் குழந்தைகளும் லதாவின் பரமாரிப்பிலேயே இருக்க நீதிபதி உத்தரவிட்டார். இதனால் ரவிச்சந்திரன் அதிர்ச்சியடைந்தார்.
விசாரணை முடிந்து ஊருக்கு வந்த ரவிச்சந்திரன் சைவராஜ் வீட்டுக்கு சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார். அப்போது வாக்குவாதம் முற்றவே ரவி தான் வைத்திருந்த துப்பாக்கியை வைத்து சைவராஜை சுட்டுக்கொன்றார். இதனால் அதிர்ச்சியடைந்த சைவராஜின் மகன் தடுக்க சென்றபோது அவரையும் தாக்கினார் ரவிச்சந்திரன். இதில் காயமடைந்த முருகேசன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.
இந்தச் சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த காவல் துறையினர் ரவிச்சந்திரனை கைது செய்து அவர் வைத்திருந்த இரட்டை குழல் துப்பாக்கியை பறிமுதல் செய்தனர். தற்போது ரவியிடம் விசாரணை நடந்துவருகிறது. ரவிச்சந்திரன் வைத்திருக்கும் துப்பாக்கிக்கு 2024ஆம் ஆண்டுவரை லைசென்ஸ் இருப்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக, இருவருக்கும் பிரச்னை ஆரம்பித்த நாள்களில் இருந்தே ரவிச்சந்திரனிடம் இருந்த துப்பாக்கியை பறிமுதல் செய்ய பொதுமக்கள் பலமுறை காவல் துறையினரிடம் வலியுறுத்தியதாகவும், ஆனால் காவல் துறை பறிமுதல் செய்யவில்லை எனவும் கூறப்படுகிறது.
மேலும் படிக்க | 26/11 Attack Mumbai: இந்தியாவை உலுக்கிய மும்பை தாக்குதல், 14-ம் நினைவு தினம் இன்று
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ