கோயில் திருவிழாவில் ஓட ஓட விரட்டி வெட்டி கொல்லப்பட்ட இளைஞர்

MURDER ; நள்ளிரவில் மர்ம கும்பலால் இளைஞர் ஒருவர் வெட்டிக்கொல்லப்பட்டிருக்கிறார். சிவகங்கையை அலற விட்ட பகீர் சம்பவத்தின் பின்னணி இதோ...

Written by - Gowtham Natarajan | Last Updated : Jul 16, 2022, 09:00 PM IST
  • நள்ளிரவில் அரங்கேறிய பயங்கரம்
  • பழிக்குப்பழியான நடந்த கொலை ?
  • போலீசாரின் விசாரணை - திடுக்கிடும்
கோயில் திருவிழாவில் ஓட ஓட விரட்டி வெட்டி கொல்லப்பட்ட இளைஞர்  title=

சிவகங்கை காளவாசல் பகுதியைச் சேர்ந்தவர் பரமசிவம். தச்சு வேலை பார்த்து வந்த பரமசிவம் மீது காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்நிலையில், நேற்று சிவகங்கை பிள்ளைவயல் காளியம்மன் கோவில் பூச்சொரிதல் விழா என்பதால் ஆங்காங்கே கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றுவந்தது. அதேபோல் காளவாசல் பகுதியிலும் கலை நிகழ்ச்சி நடைபெற்று வந்தது. அப்போது அதனைக் காணச் சென்றிருந்த பரமசிவத்தை நள்ளிரவு 1 மணியளவில் பின் தொடர்ந்த மர்ம கும்பல் சுற்றி வளைத்துள்ளது. அதை சுதாரித்துக் கொண்ட பரமசிவம் அங்கிருந்து தப்பியோடினார்.

சிவகங்கை,கொலை,சிவகங்கை, பரமசிவம்,பரமசிவம் கொலை,

ஆனால் அவரை விடாது துரத்திய கும்பல் ஓடஓட விரட்ட அரிவாளால் சரமாரியாக வெட்டி கொன்றது.பின்னர், அந்த கும்பல் அங்கிருந்து தப்பியோடியது. இதனை கண்ட அக்கம்பக்கத்தினர் சிவகங்கை நகர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை பரமசிவத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

சிவகங்கை,கொலை,சிவகங்கை, பரமசிவம்,பரமசிவம் கொலை,

மேலும் படிக்க | தற்கொலையா நரபலியா?... கள்ளக்குறிச்சி மாணவி மரணத்தில் திடுக் திருப்பங்கள்

குற்றவாளிகளை தேடிவருவதுடன் இவர் மீது குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் அதற்கு பழிவாங்கும் நடவடிக்கையாக இந்த கொலை நடைபெற்றதா? என்கிற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோவில் திருவிழாவில் நடந்த பயங்கர சம்பவத்தால் சிவகங்கையில் பெரும் பதட்டம் நிலவி வருகிறது. 

மேலும் படிக்க | அசாமை மிரட்டும் ஜப்பானிய மூளைக்காய்ச்சல் - 4 ஆண்டுகளில் 1,016 பேர் பலி !

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

 

 

Trending News