ஓடும் ரயிலில் சிறுமியிடம் பாலியல் சீண்டல்! 65 வயது முதியவர் கைது.

ஓடும் ரயிலில் 9 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட 65 வயது முதியவரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். 

Written by - Tamil Arasan | Edited by - Dayana Rosilin | Last Updated : May 17, 2022, 11:43 AM IST
  • ஓடும் ரயிலில் சிறுமியிடம் பாலியல் சீண்டல்
  • 65 வயது முதியவர் கைது செய்த போலீஸார்
  • வழக்குப் பதிவு செய்து விசாரணை
ஓடும் ரயிலில் சிறுமியிடம் பாலியல் சீண்டல்! 65 வயது முதியவர் கைது. title=

சென்னையை சேர்ந்த 9 வயது சிறுமி தனது பெற்றோருடன் கர்நாடக மாநில கே.ஆர்.புரம் ரயில் நிலையத்தில் இருந்து சென்னை நோக்கி எக்ஸ்பிரஸ் ரயிலில் வந்துள்ளார். சிறுமியின் பெற்றோரும், சிறுமியும் தூங்கிக்கொண்டிருந்த நிலையில் ரயில் ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தை நெருங்கியுள்ளது. அப்போது அதே பெட்டியில் பயணம் செய்த முதியவர் ஒருவர் தூங்கிக்கொண்டிருந்த சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.

மேலும் படிக்க | தினமும் சரக்கு கேட்டு தொந்தரவு செய்த நண்பனைத் துடித்துடிக்க கொலை செய்த இளைஞர்!

பயத்தில் துள்ளி எழுந்த சிறுமி தனக்கு நடந்த சம்பவம் குறித்து பெற்றோரிடம் கூறியுள்ளார். இதனை தொடர்ந்து சிறுமியின் பெற்றோர் டிக்கெட் பரிசோதகரிடம் நடந்த சம்பவம் குறித்து விளக்கியுள்ளனர்.மேலும் இது குறித்து முதியவரிடமும் சிறுமியின் பெற்றோர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனை அடுத்து, ரயில் ஜோலார்ப்பேட்டை வந்தடைந்தவுடன் அங்கிருந்த ரயில்வே போலீஸாரிடம் முதியவர் குறித்து புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து அங்கு வந்த ஜோலார்பேட்டை காவல்துறை அதிகாரிகள் முதியவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை நடத்தியுள்ளனர். விசாரணையில் சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட முதியவர், சென்னை வடபழனி பூக்கார தெருவில் வசித்து வந்த சாமுவேல் பெட்ரோமாண்டஸ் என்பது தெரியவந்தது.இதனையடுத்து ரயில்வே காவல்துறையினர் மற்றும் போலீஸார் முதியவரை திருப்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.

மேலும் படிக்க | உயிரிழந்த தாயை வீட்டிற்குள் டிரமில் போட்டு மூடிய மகன்.!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News