Jayakumar Latest News : சென்னை ராயபுரம் தொகுதிக்குட்பட்ட கொருக்குப்பேட்டை பகுதியில் அதிமுக சார்பில் அண்ணாவின் 116வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அதிமுக முன்னாள் அமைச்சரான ஜெயகுமார் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார். அப்போது, பேசிய அவர், மகளிருக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் கொடுத்துவிட்டு டாஸ்மாக் மூலம் அதே குடும்பத்திடம் 15 ஆயிரம் ரூபாய் வசூலிக்கிறது தமிழ்நாடு அரசு என குற்றம்சாட்டினார். மேலும், அண்ணாவின் மக்கள் திட்டங்களுக்கு துரோகம் செய்யும் அரசாக திமுக அரசு செயல்படுகிறது என்றும் குற்றம்சாட்டினார்.
"தமிழகத்தில் இதுவரை 37 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த ஒரே கட்சி அதிமுக தான். தற்போது ஆட்சியில் இருப்பவர்களுக்கு கருணாநிதி புகழ் பாட நேரம் இல்லாத காரணத்தால் மக்கள் பணிகளை மறந்துவிட்டனர். தமிழகத்தில் இதுவரை செயல்படுத்தப்பட்டு வந்த அண்ணாவின் கொள்கைகளையும், அண்ணாவின் மக்கள் நலத்திட்டத்திற்கு துரோகம் செய்யும் அரசாக திமுக அரசு செயல்பட்டு வருகிறது" என ஜெயக்குமார் விமர்சித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், " அதிமுக ஆட்சி காலத்தின்போது செந்தில்பாலாஜி குறித்து ஆள்கடத்தல் செய்பவர், செந்தில்பாலாஜி ஒரு சீட்டிங், பிராடு என விமர்சித்த ஸ்டாலின் தற்போது ஜாமீனில் வெளிவந்துள்ள அவரை தியாகி என கூறுவது எவ்வளவு வெக்ககேடான விஷயம் என்பதை தமிழக மக்கள் கவனித்து வருகின்றனர். திமுக அரசு சாராய வருமானத்திலேயே குறியாக உள்ளது. அதிமுகவில் இருந்து திமுகவிற்கு போன முத்துசாமி தற்போது தமிழக மக்களிடம் குடியை விற்பனை செய்து வருகிறார். தமிழகத்தில் இதுவரை சுமார் 3 ஆயிரம் மனமகிழ் மன்றத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது." என தெரிவித்தார்.
மேலும், ஒரு குடும்பத்தில் வேலைக்கு செல்லும் ஆண்கள் சம்பாதித்த பணத்தை பார்களில் செலவு செய்கின்றனர். இதன் மூலம் ஒரு குடும்பம் வாயிலாக மாதந்தோறும் ரூ.15 ஆயிரம் வருமானம் கிடைக்கிறது. ஆனால் இதனை மறைத்து கண்கட்டி வித்தையாக அதே குடும்பத்தில் உள்ள மகளிருக்கு ஆயிரம் ரூபாயை இந்த திமுக அரசு வழங்கி வருகிறது எனவும் ஜெயக்குமார் குற்றம்சாட்டினார்.
மேலும் படிக்க | Ration Card : ரேஷன் அட்டைதாரர்களுக்கு விரைவில் குட்நியூஸ் அறிவிக்கிறது தமிழக அரசு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ