5 நாள் பரோலில் வெளி வருகிறார் சசிகலா!

Last Updated : Oct 6, 2017, 01:04 PM IST
5 நாள் பரோலில் வெளி வருகிறார் சசிகலா! title=

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கணவர் நடராஜனை காண 5 நாள் பரோலில் வருகின்றார் சசிகலா!

* அதிமுக நிர்வாகிகளுடன் தொடர்பு கொள்ள அனுமதி இல்லை

* தனது வீட்டிற்கும், மருத்துவமனைக்கும் மட்டுமே செல்ல அனுமதி

என்ற நிபந்தனைகளுடன் இன்று சென்னை வருகிறார் சசிகலா!

சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சசிகலாவின் கணவர் நடராஜனுக்கு, கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ள தனது கணவரை காண 15 நாட்கள் பரோல் வேண்டும் என சசிகலா முன்னதா மனு தாக்கல் செய்தார். ஆனால் அந்த மனுவில் குளறுபடி இருந்ததால் சிறை நிர்வாகம் அதனை தள்ளுபடி செய்தது. மீண்டும் நேற்று முன்தினம் பரோல் கேட்டு சசிகலா தரப்பில் சரியான விளக்கங்களுடன் மனு தாக்கல் செய்யப்பட்டது. 

சசிகலா பரோல் மனுவினை அடுத்து கர்நாடக சிறை நிர்வாகம் தமிழக அரசுக்கு கடிதம் அனுப்பியது. அதில், சசிகலா பரோலில் விடிவிக்கப்பட்டால், அவரின் பாதுகாப்பு மற்றும் அவர் தங்குமிடம் குறித்தும், சட்ட ஒழுங்கு குறித்தும் கேட்டு கடிதம் அனுப்பியது.

இதனையடுத்து, சசிகலாவுக்கு பரோல் வழங்குவதில் எந்த ஆட்சேபனை இல்லை என தமிழக அரசு தரப்பில் அறிவித்து. 

இந்நிலையில் தற்போது சசிகலாவிற்கு 5 நாள் நிபந்தனை பரோல் அளித்து கர்நாடக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எனவே அவரை சென்னை அழைத்து வர டிடிவி உட்பட அவரது ஆதரவாளர்கள் கர்நாடக சிறையில் காத்திருக்கின்றனர்!

Trending News