தியாகராஜ பாகவதர் பேரனுக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி- முதல்வர் மு.க.ஸ்டாலின்

தியாகராஜ பாகவதர் பேரனுக்கு முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்க ஆணையிட்டுள்ளார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jul 1, 2021, 08:46 AM IST
தியாகராஜ பாகவதர் பேரனுக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி- முதல்வர் மு.க.ஸ்டாலின் title=

தமிழ் திரையுலகில் முதல் சூப்பர் ஸ்டராக வலம் வந்தவர் எம்.கே.தியாகராஜ பாகவதர். பவளக்கொடி என்கிற திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமான இவர் சுமார் 15 தமிழ்த் திரைப்படங்களில் நடித்துள்ளார். அதில் 6 படங்கள் மிகப்பெரிய வெற்றிப்படங்களாகும். 

இவரின் சாதனைப் படமான ஹரிதாஸ் 3 ஆண்டுகள் ஒரே திரையரங்கில் ஒடி 3 தீபாவளிகளைக் கண்ட ஒரே இந்தியத் திரைப்படம் என்ற சாதனையை அன்றையக் காலகட்டத்தில் பெற்றது. சென்னையில் மிகப் பரபரப்பாகப் பேசப்பட்ட லட்சுமிகாந்தன் கொலை வழக்கில் பாகவதர் மற்றும் அவரின் (M. K. Thyagaraja Bhagavathar) திரையுலக உற்றத் தோழரான என். எஸ். கிருஷ்ணன் உடன் கைது செய்யப்பட்டு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனைப் பெற்றார்.

ALSO READ | பிரம்மாண்டமாக நடைபெற்றது இயக்குனர் ஷங்கர் மகள் திருமணம்; முதல்வர் நேரில் வாழ்த்து

இந்த சம்பவத்தால் அவரது சினிமா வாழ்க்கையை திருப்பி போட்டது. அதன்பிறகு அவரால் திரைவாழ்க்கையில் தனது ஆதிக்கத்தை செலுத்த முடியவில்லை. அவரது வாரிசுகளின் நிலையும் கவலைக்குரியதாகவே மாறியது.

இந் நிலையில்தான் தியாகராஜர் பாகவதரின் மகள் வயிற்று பேரன் சாய்ராம் நேற்று முன்தினம் தலைமை செயலகம் வந்திருந்தார். அவர் முதல் அமைச்சரின் (TN CM MK Stalin) தனி பிரிவில் கோரிக்கை மனு ஒன்றை வைத்து இருந்தார். அந்த கோரிக்கையில் தங்களது குடும்பம் வறுமையில் சிக்கி தவிப்பதாகவும், வாடகை கொடுக்க கூட பணம் இல்லாமல் கஷ்டப்படுவதாகவும் அவர் கூறினார். அவரின் நிலை குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் கவனத்திற்கு நேற்று கொண்டு செல்லப்பட்டது. உடனடியாக அந்த மனு மீது நடவடிக்கை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

எம்.கே.டி. என்று அன்போடு அழைக்கப்பட்ட எம்.கே.தியாகராஜ பாகவதர், தமிழ்த் திரைப்பட உலகின் முதல் நட்சத்திர அந்தஸ்து பெற்ற உயர் நட்சத்திர கதாநாயகனும், மிகச்சிறந்த கர்நாடக சங்கீத பாடகருமாகத் திகழ்ந்தவர் ஆவார். அவர் நடித்த பல திரைப்படங்கள் வெற்றிப் படங்களாக தமிழகத்தில் அன்றைய காலகட்டத்தில் உலா வந்தன. குறிப்பாக, 1944-ம் ஆண்டு வெளியான ஹரிதாஸ் என்னும் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்த இவர், தமிழ்த் திரையுலகின் முதல் சூப்பர் ஸ்டாராக கருதப்பட்டார்.

தமிழ் திரையுலகில் மிகப்பிரபலமாக அக்காலக்கட்டத்தில் விளங்கிய எம்.கே.தியாகராஜ பாகவதரின் மகள் வழிப்பேரன் சாய்ராம் மற்றும் அவரது குடும்பத்தினர், தற்போது மிகவும் வறிய நிலையில், குடியிருக்க வீடு இன்றி, மிகவும் சிரமமான சூழ்நிலையில் வசித்து வருவதை அறிந்த முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின், சாய்ராம் குடும்பத்தினருக்கு அரசு சார்பில், குறைந்த வாடகையில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியக் குடியிருப்பில், பொது ஒதுக்கீட்டின் கீழ் வீடு ஒன்றினை ஒதுக்கித் தர உத்தரவிட்டுள்ளதோடு, முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கவும் ஆணையிட்டுள்ளார்.

மனு கொடுத்த 2 நாளில் மின்னல் வேகத்தில் நடவடிக்கை மேற்கொண்ட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

ALSO READ | Tamil Nadu: இந்த மாவட்டங்களில் 9,333 அரசு பேருந்துகள் இயக்கப்படும்: அமைச்சர் ராஜகண்ணப்பன்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News