தமிழகத்தில் ரூ.2,000 நிதியுதவி வழங்கும் திட்டம் நிறுத்திம்?

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்த நிலையில், ரூ.2,000 நிதியுதவி வழங்கும் திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 

Last Updated : Mar 12, 2019, 12:40 PM IST
தமிழகத்தில் ரூ.2,000 நிதியுதவி வழங்கும் திட்டம் நிறுத்திம்? title=

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்த நிலையில், ரூ.2,000 நிதியுதவி வழங்கும் திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 

வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு அறிவிக்கப்பட்ட ரூ.2,000 சிறப்பு நிதி தற்போது நிறுத்தப்பட்டுள்ளதாகவும், மக்களவை தேர்தல் முடிந்த பிறகுதான் வழங்கப்படும் என்றும் கோவை மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார். 

விவசாயிகளுக்கு 3 கட்டமாக தலா ரூ.2,000 நிதி உதவியை மத்திய அரசும், தமிழகத்தில் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பத்தினருக்கு தலா ரூ.2,000 சிறப்பு நிதியை தமிழக அரசும் அறிவித்தது. இதற்காக தமிழகம் முழுவதும் மனுக்கள் பெறப்பட்டது.

இந்நிலையில் பாராளுமன்ற தேர்தல் தேதி நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்தது. இதைத் தொடர்ந்து ரூ.2,000 வழங்கும் நிதி உதவி திட்டத்தை கலெக்டர்கள் நிறுத்தி வைத்துள்ளனர்.

Trending News