முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி முருகன் கோவிலில் பராமரிப்பு பணி காரணமாக ரோப் கார் சேவை நிறுத்தி வைக்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது!
பழனி முருகன் கோவிலில் தைப்பூசம், பங்குனி உத்திரம், திருக்கார்த்திகை, திருவாதிரை உற்சவவிழா உள்ளிட்ட திருவிழாக்கள் விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். இப்பண்டிகை தினங்களில் லட்சக்கணக்கான மக்கள் பழனிக்கு வந்து முரகப்பெருமானை தரிசனம் செய்வது வழக்கம். திருவிழா மட்டுமின்றி வாரவிடுமுறை மற்றும் சுபமுகூர்த்த நாட்களிலும் பக்தர்கள் வருகை அதிகமாக காணப்படும்.
பிரசித்தி பெற்ற இக்கோவில் குன்றின் மலை உச்சியில் அமைந்துள்ளது என்பதால் கோவிலுக்கு செல்ல, பக்தர்களின் வசதிக்காக ரோப் கார், மின் இழுவை ரயில் போன்றவை பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் பராமரிப்பு பணி காரணமாக இன்றும், நாளையும் ரோப் கார் சேவை நிறுத்தி வைக்கப்படுகிறது என கோவில் நிற்வாகம் தெரிவித்துள்ளது. ரோப் கார் சேவை நிறுத்திவைக்கப்படுவதால் பக்தர்கள் மின் இழுவை ரயில், மற்றும் படிப்பதையை பயன்படுத்தும் படி கோவில் நிர்வாகம் கோட்டுக்கொண்டுள்ளது.
முன்னதாக கடந்த வாரம் வாரவிடுமுறையுடன் சுபமுகூர்த்த தினமும் ஒன்றாக வந்த நிலையில் பக்தர்கள் சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக படியில் நின்று காத்திருந்து முருகனை தரிசனம் செய்தனர். ரோப் கார், மின் இழுவை ரயில் என அனைத்து வழி போக்குவரத்திலும் பக்தர்கள் அலைமோதினர். இந்நிலையில் தற்போது இந்த ரோப் கார், மின் இழுவை ரயில் பராமரிப்பு பணிகளுக்கு உட்படுத்தப்படவுள்ளது என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.