ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் வரும் டிசம்பர் 21-ம் நாள் நடைபெறவுள்ள நிலையில், தேர்தலுக்கான இறுதி பிரச்சாரம் இன்றுடம் முடிவடைகிறது.
ஆர்.கே.நகர் இடைத் தேர்தலுக்கான பிரசாரம் இன்று மாலையுடன் நிறைவடைகிறது. இதற்காக ஸ்டாலின் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
முன்னாள் முதல்வர் ஜெ., மறைவுக்கு பின்னர் காலியான ஆர்.கே.நகர் தொகுதி காலியானதையடுத்து பல்வேறு சர்சரவுகளுக்கு பிரகு தற்போது இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.
வரும் டிசம்பர் 21-ம் நாள் இந்த இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தேர்தலுக்கான வாக்கு சேகரிப்பு சூடுபிடித்து நடைபெற்று வருகிறது.
ஆர்.கே.நகர். தொகுதி இடைத்தேர்தலில் மொத்தம் 59 பேர் போட்டியிடுகின்றனர். இந்த இடைத்தேர்தலில் ஏற்றுக்கொள்ளப்பட்ட 72 வேட்பாளர்களில் 14 பேர் வேட்புமனுக்களை வாபஸ் பெற்றுள்ளனர்.
இந்த தேர்தலில் போட்டியிடுவதற்கு தேர்வானோர் பட்டியலில் அதிமுக சார்பில் மதுசூதனனும், திமுக சார்பில் மருது கணேஷ், டி.டி.வி.தினகரன், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கலைக்கோட்டுதயம் மற்றும் பா.ஜ.க வேட்பாளர் கரு.நாகராஜன் வேட்புமனுக்கள் ஏற்கபட்டது. இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக உள்ளிட்ட கட்சிகள் திமுகவிற்கு ஆதரவளிப்பதாக முன்னதாகவே அறிவித்துவிட்டன.
இதில் படிவம் 26-ஐ பூர்த்தி செய்யாததால் ஜெ. தீபாவின் வேட்புமனுவை, தேர்தல் கமிஷன் நிராகரித்தது. மேலும் தீபா மனு சரியாக பூர்த்தி செய்யப்படவில்லை என காரணம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் முன்மொழிந்தவர்கள் 2 பேரின் கையெழுத்து தங்களுடையது அல்ல என்று பின்வாங்கியதால் விஷாலின் வேட்புமனுவும் நிராகரிக்கப்பட்டன. இதற்காக விஷால் சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டங்களை செய்தார். பின்னர் அவரது மனு ஏற்கப்பட்டு மீண்டும் நிராகரிக்கப்பட்டது.
இந்நிலையில் டிசம்பர் 21-ம் தேதி வாக்குப் பதிவு நடத்தப்பட உள்ளதால், அதற்கு ஒரு நாள் முன்பு தேர்தல் பிரசாரத்தை கட்சிகள் முடித்துக்கொள்ள வேண்டும். அதன்படி, பிரசாரம் இன்று மாலையுடன் நிறைவு பெறுகிறது.
அதனால், வாக்கு சேகரிப்பு சூடுபிடித்து வந்த நிலையில் ஸ்டாலின் தற்போது தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
DMK Working President MK Stalin campaigns in #Chennai's RK Nagar ahead of by-elections on December 21. pic.twitter.com/3ZFP80FtTx
— ANI (@ANI) December 19, 2017