முன்னால் முதல்வர் ஜெயலலிதா மறைவை அடுத்து, அவர் போட்டியிட்டு வெற்றிபெற்ற ஆர்.கே.நகர் தொகுதிக்கு வரும் டிசம்பர் 21 அன்று இடைத்தேர்தல் நடைப்பெறவுள்ளது.
முன்னதாக கடந்த ஏப்ரல் 12-ஆம் நாள் இந்த தொகுதிக்கான இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு பின்னர், தேர்தல் விதி மீறு வேட்பாளர்கள், வாக்காளர்களுக்கு பணப்பட்டுவடா செய்ததால் இந்த தேர்தல் நிறுத்தப்பட்டது.
அதன் பின்னர் வரும் டிசம்பர் 21-ஆம் நாள் மீண்டும் இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவித்து அதற்கான ஏற்பாடுகள் நடைப்பெற்று வருகிறது. நாளை மாலை 5 மணியோடு இந்த இடைத்தேர்தலுக்கான பிரச்சாரம் முடிவடைகிறது, எனவே கட்சி உறுப்பினர்கள் ஆர்.கே.நகரை விட்டு வெளியேற வேண்டுமென முன்னதாக தேர்தல் ஆணையம் அறிவித்திருந்த்து. மேலும் இந்த இடைத்தேர்தலில் எந்தவித ஊழலும் நடைபெறாமல் இருக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் அதிரடி அறிவிப்புகளை அறிவித்தபடி உள்ளது, அந்த வகையில் இன்று அறிவித்துள்ளதாவது...
Secretary of ECI writes to Chief Electoral Officer of Tamil Nadu, directing transfer of IPS Sudhakar, Joint Commissioner North to a non-election post & transfer of IPS Prem Anand Sinha, Joint Commissioner, Traffic as his replacement with immediate effect ahead of #RKNagarByPoll pic.twitter.com/wAxLVipNGR
— ANI (@ANI) December 18, 2017
"தென்சென்னை போக்குவரத்து இணை கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்ஹா, சுதாகர் பணியிடத்துக்கு மாற்றப்பட்டுள்ளார் என அறிவித்துள்ளது. மேலும் இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வரும் எனவும் குறிப்பிட்டுள்ளது."