மறுதேர்தல் நடத்துவதே உண்மையான ஜனநாயகம் - சீமான்

Last Updated : Feb 16, 2017, 01:23 PM IST
மறுதேர்தல் நடத்துவதே உண்மையான ஜனநாயகம் - சீமான்  title=

இந்த ஆட்சியை கலைத்துவிட்டு மறுதேர்தல் நடத்துவதே உண்மையான ஜனநாயகம் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

அதிமுகவில் நிலவும் உட்கட்சி பூசலால் தமிழகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் செய்தியாளர்களிடம் சீமான் கூறியதாவது:- 

மக்களால் தேர்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் கடத்தபட்டு கூவத்தூரில் அடைத்து வைக்கபட்டுள்ளது ஜனநாயகத்தையே கேள்விகுறியாக்கியுள்ளது. கூவத்தூரில் அடைத்து வைக்கபட்டுள்ள எம்.எல்.ஏக்கள் ஒருமித்த கருத்தோடு இருப்பதாக தெரியவில்லை. எனவே அவர்களை அங்கிருந்து விடுவிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அதிமுகவில் யாரை பொதுச்செயலாளராக தேர்தெடுக்க வேண்டும் என்பது அக்கட்சியினரின் உரிமை அதே வேளையில் தமிழகத்தில் யார் ஆட்சியமைக்க வேண்டும் என்பதை மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும் தற்போது உள்ள நிலையில் மக்கள் வாக்களித்து முதல்வாரன ஜெயலலிதா இறந்துவிட்டதால் மக்களின் மனநிலைக்கு நேர் எதிரான செயல்கள் தற்போது நடந்து வருகிறது. எனவே இந்த ஆட்சியை கலைத்துவிட்டு மறுதேர்தல் நடத்துவதே உண்மையான ஜனநாயகம் என சீமான் கூறினார்.

தற்போது அதிமுக சட்டசபை குழு தலைவராக தேர்வு செய்யப்பட்ட எடப்பாடி பழனிச்சாமி இன்று காலை சந்திக்க, கவர்னர் வித்யா சாகர் ராவ் நேரம் ஒதுக்கியிருந்தார். இந்நிலையில் பழனிச்சாமியை ஆட்சியமைக்க கவர்னர் வித்யாசாகர் ராவ் அழைப்பு விடுத்துள்ளார் என்றும் மேலும் 15 நாளில், நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி சட்டசபையில் தனது பெரும்பான்மையை நிரூபிக்கவும் கவர்னர் உத்தரவிட்டுள்ளார் என தகவல் வந்துள்ளது.

Trending News