நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த அத்தனூர், ஆயிபாளையம், கோம்பக்காடு, அத்தனூர்புதூர், தட்டான்குட்டைபுதூர், ஆலங்காடுபுதூர், உடும்பத்தான்புதூர் மற்றும் தாசன்புதூர் மற்றும் அதனைச் சுற்றி உள்ள எட்டுப்பட்டி கிராமங்களில் 3000க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கடந்த 100 வருடங்களுக்கு முன்பு அப்பகுதியை சேர்ந்த முன்னோர்கள் தை பொங்கல் மற்றும் மாட்டுப் பொங்கல் வெகு விமர்சையாக கொண்டாடியுள்ளனர். அப்போது மாட்டுப் பொங்கல் தினத்தன்று எட்டுப்பட்டி கிராமங்களில் உள்ள மாடுகள் மற்றும் மனிதர்களுக்கு அம்மை நோய்கள் தாக்கியதில் ஏராளமானோர் உயிர் இழந்ததாக கூறப்படுகிறது.
அதனைத் தொடர்ந்து தை பொங்கல் மற்றும் மாட்டு பொங்கல் தினத்தை கொண்டாடினால் ஊர் மக்களுக்கும், விலங்குகளுக்கு ஏதாவது ஆபத்து நடந்து விடுமா என்ற பயத்தில் தற்போது வரை அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கை பொங்கல் மற்றும் மாட்டுப் பொங்கல் கொண்டாடாமல் புறக்கணித்து வருகின்றனர்.
மேலும் படிக்க | சர்க்கரை நோய் இருப்பவர்கள் சர்க்கரை பொங்கல் சாப்பிடலாமா?
மேலும் இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில் முன்னோர் காலத்தில் தைப்பொங்கல் மற்றும் மாட்டுப் பொங்கல் தினத்தன்று மாடுகளுக்கு பொங்கல் வைத்து மாடுகளை அலங்கரித்து மாட்டுப் பொங்கல் கொண்டாடி வந்ததாகவும் அப்போது திடீரென்று மாடுகளுக்கு அம்மை நோய், கோமாரி உள்ளிட்ட நோய்களை தாக்கியதாலும், மனிதர்களுக்கு அம்மை நோய் தாக்கியதால் ஏராளமான உயிர்கள் உயிரிழந்ததாக கூறினார்.
அதனைத் தொடர்ந்து எட்டுப்பட்டி கிராமங்களில் மாரியம்மன் கோவில் இல்லாத காரணத்தினால் அத்துனூர் அம்மன் கோவிலில் அப்பகுதியை சேர்ந்த எட்டுப்பட்டி கிராம மக்கள் கோவிலுக்கு சென்று அம்மனை வழிபட்டு கோவிலில் உள்ள தீர்த்தங்களை தெளித்ததன் மூலம் கிராம மக்கள் அம்மை நோய்களிலிருந்து உயிர் தப்பியதாக தெரிவித்தனர். முன்னோர்களின் பழக்கவழக்கங்களை தொடர்ந்து தற்போது மாட்டுப் பொங்கல் தினத்தன்று மாடுகளுக்கு பொங்கல் வைக்காமல் மாடுகளுக்கு அரிசியை பச்சையாகவும், வாழைப்பழங்களை வழங்கி மாட்டுப்பொங்கலை கொண்டாடி வருவதாகவும் தெரிவித்தனர்.
மேலும் படிக்க | அவனியாபுரம்; பொறி பறக்கும் ஜல்லிக்கட்டு; சீறும் காளைகள் - அடக்கும் காளையர்கள்..!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ