புதுச்சேரி மாநிலத்தின் வருமானத்தை உயர்த்த, மாநிலத்தில் விற்கப்படும் மதுபானங்களின் விலையை உயர்த்தி மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
புதுச்சேரி மாநிலத்தின் வருமானத்தை உயர்த்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் இன்று முதல் கலால் வரி உயர்த்தப்படுகிறது என மாநில அரசு அறிவித்துள்ளது.
இந்த புது அறிவிப்பின் படி 187.5 mL மதுபான(குவாட்டர்) பாட்டில்கள் ரூ.5 வரை உயர்வு அடைகிறது, அதேப்போல் 750 mL மதுபான(புஃல்) பாட்டில்கள் ரூ.20 வரை உயர்வு காண்கிறது.
இதுகுறித்து புதுவை அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது., ரூ. 600 வரையிலான மதுபாட்டில்களுக்கு ரூ. 93 கலால் வரி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேப்போல் ரூ. 600-க்கு மேல் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ள மதுபாட்டில்களுக்கு ரூ. 110 கலால் வரி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.