இந்திய காவல் பணித்திறனாய்வுப் போட்டியில் வெற்றிப்பெற்ற காவலர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் பரிசுத் தொகை வழக்கி பாராட்டினார்!
கடந்த 2015-ஆம் ஆண்டு ஹரியானாவில் நடைப்பெற்ற 59-வது அகில இந்திய காவல் பணித்திறனாய்வுப் போட்டியில் வென்ற காவல்துறை அதிகாரிகளுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் 79,00,000 ரூபாய் பரிசுத் தொகை வழக்கி பாராட்டினார்.
மாண்புமிகு தமிழக முதல்வர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் இன்று, ஹரியானா மாநிலத்தில் நடைபெற்ற 59-வது அகில இந்திய காவல் பணித்திறனாய்வு போட்டி-2015ல் வெற்றி பெற்ற 30 காவல்துறை வீரர்களுக்கும், தமிழ்நாடு காவல் அணியின் 5 பயிற்சியாளர்களுக்கும் பரிசுத்தொகைக்கான காசோலைகளை வழங்கினார்.. pic.twitter.com/QpQBjBl8nF
— Edappadi K Palaniswami (@CMOTamilNadu) August 6, 2018
இந்தப் போட்டிகளில் தமிழக காவல்துறை அணி 7 தங்கம் மற்றும் 4 வெள்ளிப் பதக்கங்கள் என மொத்தம் 16 பதக்கங்கள் வென்றுள்ளனர்.
இதில் தங்கம் வென்றவர்களுக்கு தலா 5 லட்சம் ரூபாயும், வெள்ளிப் பதக்கம் வென்றவர்களுக்கு தலா 3 லட்சம் ரூபாய் வெண்கலப் பதக்ககம் வென்றவர்களுக்கு தலா ரூ.2 லட்சம் ரூபாய் முதலமைச்சர் அவர்கள் வழங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பல பிரிவுகளிலும் வெற்றிப் பெற்ற காவலர்களுக்கு பரிசு தொகை வழங்கப்பட்டதாகவும் தமிழக அரசுக்குறிப்பில் குறிப்பிடப்பட்டள்ளது!