தனுஷ்கோடி: கரை மணலில் புதைத்து வைக்கப்பட்டிருந்த கஞ்சா பறிமுதல்

ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடியில் இருந்து இலங்கைக்குக் கடத்தப்படவிருந்த கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Last Updated : Mar 12, 2019, 01:38 PM IST
தனுஷ்கோடி: கரை மணலில் புதைத்து வைக்கப்பட்டிருந்த கஞ்சா பறிமுதல் title=

ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடியில் இருந்து இலங்கைக்குக் கடத்தப்படவிருந்த கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

தனுஷ்கோடி வடக்கு கடற்கரை பகுதியில் இருந்து இலங்கைக்கு கஞ்சா கடத்த இருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து அங்கு போலீசார் சென்றிருந்தனர். அப்போது கடற்கரை மணலில் 2 மூட்டைகளில் புதைத்து வைக்கப்பட்டிருந்த 30 கிலோ கஞ்சாவைப் போலீசார் பறிமுதல் செய்தனர்.

 

 

இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் ராமேஸ்வரம் அருகே தனுஷ்கோடி கடல்பகுதியில் கரை ஒதுங்கிய கஞ்சா மூட்டைகள் பறிமுதல் செய்து கடலோர காவல்படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Trending News