பணப்பட்டுவாடா செய்கிறீர்களா... திமுக கவுன்சிலரை கேள்விகளால் துளைத்த பாமக வேட்பாளர் திலகபாமா

PMK Lok Sabha Candidate Thilagabama Campaign in Dindigul: திண்டுக்கல்லில் பூத் ஸ்லிப் வழங்கிய 16 வது வார்டு திமுக கவுன்சிலர் சேகரை , பூத் ஸ்லிப் நீங்கள் ஏன் வழங்குகிறீர்கள் , அப்படி என்றால் பணப்பட்டுவாடா செய்கிறீர்களா என்று சரமாரியாக கேள்வி எழுப்பி பரபரப்பை ஏற்படுத்தினார் பாமக வேட்பாளர் திலக பாமா 

Written by - JAFFER MOHAIDEEN | Last Updated : Apr 17, 2024, 03:29 PM IST
  • திலகபாமா காலை 7 மணி முதல் திண்டுக்கல் மாநகராட்சி பகுதிகளில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
  • திமுக கவுன்சிலர் சேகர் தனது இருசக்கர வாகனத்தை எடுத்துக் கொண்டு அங்கிருந்து கிளம்பி சென்றார்.
  • இன்று முதல் மூன்று நாட்களுக்கு அரசு மதுபான கடைகள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
பணப்பட்டுவாடா செய்கிறீர்களா... திமுக கவுன்சிலரை கேள்விகளால் துளைத்த பாமக வேட்பாளர் திலகபாமா title=

PMK Lok Sabha Candidate Thilagabama Campaign in Dindigul: வரும் 19ஆம் தேதி பாராளுமன்றத் தேர்தல் நடைபெறுவதை ஒட்டி திண்டுக்கல்லில் கடைசி கட்ட பிரச்சாரத்தில் அரசியல் கட்சியினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் பாட்டாளி மக்கள் கட்சியின் திண்டுக்கல் பாராளுமன்ற வேட்பாளர் திலகபாமா காலை 7 மணி முதல் திண்டுக்கல் மாநகராட்சி பகுதிகளில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார் காலை 10 மணிக்கு திண்டுக்கல் பழனி சாலையில் கள்ளத்தனமாக மதுபானம் விற்பனை செய்தவர்களை பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தார். 

அதனைத் தொடர்ந்து பழனி ரோடு, காட் ஆஸ்பத்திரி ரோடு, உழவர் சந்தை வழியாக ஜி டி என் சாலை பகுதியில் உள்ள எம்.எஸ்.பி பள்ளி எதிரே மாநகராட்சி ஊழியர்கள் கொடுக்க வேண்டிய பூத் ஸ்லிப்பை, 16 வது வார்டு திமுக கவுன்சிலர் சேகரை பாமக வேட்பாளர் திலகபாமா நீங்கள் எதற்காக பூத் ஸ்லிப் வழங்கிக் கொண்டிருக்கிறீர்கள் .பூத் ஸ்லிப் நீங்கள் வழங்குகிறீர்கள் என்றால் ஓட்டுக்கு பணம் கொடுக்கிறீர்களா என்று சரமாரியாக கேள்வி எழுப்பினார். 

அப்போது திமுக கவுன்சிலர் சேகர் தனது இருசக்கர வாகனத்தை எடுத்துக் கொண்டு அங்கிருந்து கிளம்பி சென்றார். அதனைத் தொடர்ந்து காவல்துறை மற்றும் தேர்தல் (Lok Sabha Elections) அதிகாரிகளுக்கு வேட்பாளர் திலகபாமா தகவல் அளித்ததை அடுத்து அதிகாரிகள் நேரில் வந்து விசாரணை மேற்கொண்டனர். அதனைத் தொடர்ந்து தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி முழுவதும் திமுகவினர் பண பட்டுவாடா செய்வதாகவும் அதற்கு உடந்தையாக திமுக வார்டு உறுப்பினர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் பணப்பட்டுவாடாவில் ஈடுபடுவதாகவும் அவர்கள் மீது தேர்தல் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வேட்பாளர் திலகபாமா கோரிக்கை வைத்துள்ளார். முன்னதாக, தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியின் பாமக வேட்பாளர் திலகபாமா பரப்புரை மேற்கொண்ட போது கள்ளத்தனமாக திண்டுக்கல் புறவழிச்சாலையில் மது விற்பனை செய்த குடோனை, பாமக வேட்பாளர் சிறை பிடித்து தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தினார்.

மேலும் படிக்க | வேலூரில் மீண்டும் உதிக்குமா உதயசூரியன்? கருத்துக் கணிப்பில் மாஸ் காட்டிய கதிர் ஆனந்த்! விவரம் என்ன?

நாடாளுமன்ற தேர்தல் நாளை மறுதினம் தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் இன்று முதல் மூன்று நாட்களுக்கு அரசு மதுபான கடைகள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியின் பாமக வேட்பாளர் திலகபாமா இன்று இறுதிக்கட்ட பரப்புரை மேற்கொண்ட போது திண்டுக்கல் புறவழி சாலையில் கொட்டப்பட்டி சாலையில் கள்ளத்தனமாக ஒரு குடோனில் மது விற்பனை செய்து கொண்டிருந்தனர்.

பரப்புரையில் ஈடுபட்டிருந்த திலகபாமா உடனடியாக வாகனத்தில் இருந்து கீழே இறங்கி குடோனுக்கு உள்ளே நுழைந்து கள்ளத்தனமாக மது விற்பனை செய்த விற்பனையாளர்களை சிறை பிடித்து தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். உடனடியாக தொலைபேசி வாயிலாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்கு தொடர்பு கொண்டு திண்டுக்கல்லில் அரசு மதுபான கடை விடுமுறை என்றாலும் கள்ளத்தனமாக மது விற்பனை படுஜோராக நடைபெற்று வருகிறது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த திண்டுக்கல் தாலுகா காவல்துறையினர் கள்ளத்தனமாக மது விற்பனை செய்த குடோனை சீல் வைத்து விற்பனையாளர் சேசு என்பவரை கைது செய்து அழைத்துச் சென்றனர். இச்சம்பவம் திண்டுக்கல்லில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் படிக்க | TASMAC Leave : நாடாளுமன்ற தேர்தலால் டாஸ்மாக் லீவ்! மது கடைகளில் நிரம்பி வழிந்த கூட்டம்..

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News