PM கிசான் மோசடி: ஆளும் அதிமுக அரசிற்கும் இதில் தொடர்பு உள்ளது: கனிமொழி சந்தேகம்!!

செப்டம்பர் மாத தொடக்கத்தில் கடலூர், விழுப்புரம், கள்ளக்குரிச்சி, திருவண்ணாமலை, கரூர், வேலூர் போன்ற மாவட்டங்களில் இந்த மோசடி நடந்துள்ளது பற்றி தெரியவந்தது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 10, 2020, 03:41 PM IST
  • PM Kisan திட்ட ஊழலில் ஆளும் அதிமுக (ADMK) அரசாங்கத்தின் தொடர்பு இருக்கக்கூடும் என கனிமொழி சந்தேகிக்கிறார்.
  • சிபி-சிஐடி இந்த வழக்கில் பல கைதுகளை செய்துள்ளது.
  • பல அரசாங்க ஊழியர்களுக்கு இடைநீக்க உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன.
PM கிசான் மோசடி: ஆளும் அதிமுக அரசிற்கும் இதில் தொடர்பு உள்ளது: கனிமொழி சந்தேகம்!! title=

சென்னை:பிரதம மந்திரி விவசாயிகள் நலத்திட்டமான PM Kisan திட்ட ஊழலில் (PM Kisan Scam) ஆளும் அதிமுக (ADMK) அரசாங்கத்தின் தொடர்பு இருக்கக்கூடும் என திமுகவின் மாநிலங்களவை எம்.பி. கனிமொழி சந்தேகிக்கிறார்.

செப்டம்பர் மாத தொடக்கத்தில் கடலூர், விழுப்புரம், கள்ளக்குரிச்சி, திருவண்ணாமலை, கரூர், வேலூர் போன்ற மாவட்டங்களில் இந்த மோசடி நடந்துள்ளது பற்றி தெரியவந்தது.

இந்த மாவட்டங்களில், விவசாயிகள் அல்லாத சிலரும் விவசாயிகளுக்கு 6,000 ரூபாய் வழங்கும் பிரதம மந்திரி கிசான் திட்டத்திற்காக தங்கள் வங்கிக் கணக்குகளைச் சேர்த்தனர். அவர்கள் திட்டத்தின் பயனடைவதற்கான அளவுகோல்களுக்கு தகுதியற்றவர்கள் என்று பின்னர் கண்டறியப்பட்டது.

உள்ளூர் அரசாங்க அதிகாரிகளுடன் தொடர்பு வைத்திருக்கும் அத்தகைய நபர்கள் விவசாயிகளுக்கு முறையாக வழங்கப்பட வேண்டிய பணத்தை தங்கள் பக்கம் மாற்றிக்கொண்டிருந்தனர்.

ALSO READ: PM Kisan மோசடி: கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்: தமிழக முதல்வர்!!

இந்த மோசடி தற்போது அம்பலமாகியுள்ளது. சிபி-சிஐடி (CB-CID) இந்த வழக்கில் பல கைதுகளை செய்துள்ளது. பல அரசாங்க ஊழியர்களுக்கு பல இடைநீக்க உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன.

இதைத் தொடர்ந்து, மாநிலங்களவை எம்.பி. கனிமொழி (MP Kanimozhi) ஆளும் அரசாங்க அமைச்சர்களின் உதவியின்றி இந்த மோசடி நடந்திருக்க முடியாது என்ற குற்றச்சாட்டை முன்வைத்தார்.

தனது தாக்குதலை மேலும் வலுப்படுத்துகையில், அவர், பாஜக அரசாங்கத்தையும் குற்றம் சாட்டினார்.

சுமார் 110 லட்சம் ரூபாய் தொகை 5 லட்சம் போலி பயனாளிகளால் பறிக்கப்பட்டுள்ளதாக வந்த ஒரு செய்தி அறிக்கையை இணைத்து அவர் இந்த விவரங்களை ட்வீட் செய்துள்ளார்.

ALSO READ: PMKSY மோசடி: கடலூரில் பல அதிகாரிகளிடம் CB-CID தீவிர விசாரணை!!

Trending News