டேங்கர் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்திற்கு உயர்நீதிமன்றம் தடை!!

Last Updated : Jul 10, 2018, 05:14 PM IST
டேங்கர் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்திற்கு உயர்நீதிமன்றம் தடை!!  title=

பெட்ரோல் டேங்கர் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்து உத்தரவு! 

திருவள்ளூர் பகுதியில் உள்ள ஹிந்துஸ்தான் பெட்ரோலிய நிறுவனம், ஒப்பந்தப்படி, பெட்ரோல், டீசல் ஏற்றிச் செல்லும் டேங்கர் லாரி ஊழியர்களுக்கு 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும். ஆனால், ஒப்பந்தத்தின்படி ஊதியத்தினை உயர்த்தவில்லை. 

இதனால்,ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முதல் டேங்கர் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 2 ஆம் நாளான இன்றும் வேலைநிறுத்தம் தொடர்ந்ததால் முக்கிய பகுதிகளில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. 
 
இதையடுத்து, ஹிந்துஸ்தான் பெட்ரோலிய நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் டேங்கர் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தத்திற்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது. மேலும், இது தொடர்பாக தமிழக அரசு மற்றும் டிஜிபி 2 வாரங்களில் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது!

 

Trending News