Petrol Prices Latest Update: மக்களின் இன்றியமையாத தேவைகளில் ஒன்றாக இருக்கும் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வரை மாதம் 2 முறை, நிர்ணயம் செய்யும் முறை பழக்கத்தில் இருந்தது.
ஆனால் தற்போது பாரத் பெட்ரோலியம் (bharat Petroleum), ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் (Hindustan Petroleum), இந்தியன் ஆயில் (Indian Oil) ஆகிய பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் டீசல் விலைகளை தினசரி நிர்ணையிக்கின்றன. அதன் விலைகளின் இன்றைய நிலவரம் பற்றி அறிந்து கொள்ளலாம்.
கடந்த சில நாட்களாக பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலைகளை (Petrol, Diesel Price) அதிகரித்து வருகின்றன
சென்னையில் நேற்றைய பெட்ரோல் விலை 26 காசுகள் அதிகரிக்கப்பட்டு லிட்டருக்கு ரூ.101.53 ஆக விற்பனை செய்யப்பட்டது. அதே போன்று டீசல் விலையும் 37 காசுகள் அதிகரிக்கப்பட்டு ரூ. 97.26 என்ற விலையில் விற்கப்பட்டது.
இந்நிலையில், இன்று பெட்ரோல் விலை நேற்றைய விலையிலிருந்து 26 காசுகள் உயர்த்தப்பட்டு லிட்டருக்கு ரூ.101.79 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
டீசல் விலையும் நேற்றைய விலையிலிருந்து 33 காசுகள் உயர்ந்து லிட்டருக்கு ரூ.97.59 என்ற விலையில் விற்கப்பட்டு வருகிறது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் (Corona Virus) பரவலை தடுக்க கடந்த ஆண்டு மார்ச் இறுதியில் முழுமையான லாக்டவுன் அமல்படுத்தப்பட்டது. அதன் பின்னர் பெட்ரோல் டீசல் விலைகளில் மாற்றம் இல்லாமல் இருந்தது. அதன் பிறகு விலைகளில் தொடர்ந்து ஏற்ற இறக்கம் காணப்படுகிறது என்பதோடு, பல இடங்களில் பெட்ரோல் விலை ரூ.100க்கு அதிகமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.