ராதாகிருஷ்ணனிடம் உண்மை போட்டுடைத்த மக்கள் - சேலம் மருத்துவமனையில் என்ன நடந்தது ?

ஆய்வு செய்ய வந்த ராதாகிருஷ்ணனை மடக்கி சேலம் அரசு மருத்துவமனையின் குறைகளைச் சொன்ன பொதுமக்கள்.!  

Written by - நவீன் டேரியஸ் | Last Updated : May 8, 2022, 11:54 AM IST
  • சேலம் அரசு மருத்துவமனையில் ஆய்வு செய்த ராதாகிருஷ்ணன்
  • குறைகளை அடுக்கடுக்காக சொல்லிய நோயாளிகளின் உறவினர்கள்
  • அதிர்ச்சியில் ராதாகிருஷ்ணன் - ஊழியர்களை அழைத்து உத்தரவு
ராதாகிருஷ்ணனிடம் உண்மை போட்டுடைத்த மக்கள் - சேலம் மருத்துவமனையில் என்ன நடந்தது ? title=

தமிழகம் முழுவதும் இன்று மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. இதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வந்தன. ஏற்பாடுகளை சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் நேற்று ஆய்வு செய்தார். கிட்டத்தட்ட சேலத்தில் இருந்து சென்னை வரை நடைபெறும் தடுப்பூசி சிறப்பு முகாம் ஏற்பாட்டினை அவர் ஆய்வு செய்தார்.  இதற்காக, நேற்றிரவு சேலம் வந்த தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் திடீரென அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டார். 

மேலும் படிக்க | மாஸ்க் அணியாவிட்டால் அபராதம்...மாற்றி மாற்றி பேசும் அரசு

அப்போது, தமிழக அரசின் பச்சிளம் குழந்தைகளுக்கான சிறப்பு வார்டுகளையும், அங்கு செய்யப்பட்டுள்ள வசதிகளையும் அவர் ஆய்வு செய்தார். தொடர்ந்து மருத்துவமனையின் முதல்வர் வள்ளி சத்தியமூர்த்தியிடம் ஆலோசனை மேற்கொண்ட ராதாகிருஷ்ணன், மருத்துவமனை ஊழியர்களிடமும் குறைகளைக் கேட்டறிந்தார். 

ஆய்வை முடித்துவிட்டு ராதாகிருஷ்ணன் கிளம்பிச்செல்லும் போது திடீரென 50க்கும் மேற்பட்ட நோயாளிகளின் உறவினர்கள் அவரைச் சூழ்ந்து கொண்டனர். பல அதிர்ச்சியூட்டும் தகவலை ராதாகிருஷ்ணனிடம் அவர்கள் எடுத்துக்கூறினர். அதில், ‘நீங்கள் வரும் தகவல் அறிந்து, அவசர அவசரமாக மருத்துவமனை வளாகங்களை தூய்தை செய்தனர். மருத்துவமனையில் குடிக்க தண்ணீர் கூட இல்லை. வளாகம் முழுக்க குப்பை நிரம்பிக் கிடக்கிறது. கழிப்பிடம் இல்லை. இருக்கும் கழிப்பிடம் சுகாதாரமற்று இருப்பதால் உள்ளே நுழையக்கூட முடியாத நிலை இருக்கிறது. இதைவிட, மருத்துவமனை ஊழியர்கள் அலட்சியமாக பேசுகின்றனர். நோயாளிகளை தரக்குறைவாக நடத்துகின்றனர்.’ என்றனர். 

மேலும் படிக்க | Remdesivir மருந்து குறித்து சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் அளித்த முக்கிய தகவல்

தொடர்ந்து, பல்வேறு குற்றச்சாட்டுகளை நோயாளிகளன் உறவினர்கள் முன்வைத்தனர். ஒருவருக்கொருவர் மாறி மாறி புகார் தெரிவித்து, கேள்வி கேட்டதால் சுகாதாரத்துறைச் செயலர் ராதாகிருஷ்ணன் அதிர்ச்சியைந்தார். இந்தப் புகார்கள் குறித்து உடனடியாக மருத்துவமனை முதல்வரை அழைத்து விளக்கம் கேட்டதோடு அவரை எச்சரிக்கையும் செய்தார். யாராவது முக்கிய அதிகாரிகள் வந்தால் மட்டுமே அரசு மருத்துவமனை வளாகம் தூய்மை செய்யப்படுவதாக பொதுமக்கள் மீண்டும் புகார் தெரிவித்ததால், ராதாகிருஷ்ணன் சங்கடத்திற்கு ஆளாகியுள்ளார். ‘இனி இதுபோன்ற விஷயங்கள் நடக்காது. உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’ என கனிவாக  அவர்களிடம் எடுத்துக் கூறியதால் அவர்கள் சமாதானம் அடைந்தனர். திடீரென சுகாதாரத்துறை செயலரை பொதுமக்கள் முற்றுகையிட்டு அடுக்கடுக்கான புகார்கள் தெரிவித்ததால் ஆட்சியர், மருத்துவமனையின் முதல்வர் உட்பட பலர் அதிர்ச்சியடைந்தனர். 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR 

 

Trending News