Tamil Nadu Elections: விடுகதையாய் ட்வீட் போட்ட OPS: விடையாய் அமையுமா October 7?

தமிழக துணை முதலமைச்சரும் ஆளும் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளருமான ஓ பன்னீர்செல்வம் திங்கள்கிழமை மாநிலத்தில் அரசியல் ஊகங்களைத் தூண்டும் விடுகதைப் போன்ற ஒரு ட்வீட்டை வெளியிட்டார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 5, 2020, 02:14 PM IST
  • கட்சிக்கு வழிகாட்ட ஒரு வழிநடத்தல் குழுவை அமைக்க வேண்டும் என்று பன்னீர்செல்வம் கோரிக்கை.
  • தமிழக மக்கள் மற்றும் அதிமுக தொண்டர்களின் நலன்களைக் கருத்தில் கொண்டு இதுவரை எனது முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன-OPS
  • ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் இன்று விடுகைதையைப் போல போட்டுள்ள ட்வீட்டால் பரபரப்பு.
Tamil Nadu Elections: விடுகதையாய் ட்வீட் போட்ட OPS: விடையாய் அமையுமா October 7? title=

தமிழக துணை முதலமைச்சரும் ஆளும் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளருமான ஓ பன்னீர்செல்வம் திங்கள்கிழமை (அக்டோபர் 5) மாநிலத்தில் அரசியல் ஊகங்களைத் தூண்டும் விடுகதைப் போன்ற ஒரு ட்வீட்டை வெளியிட்டார்.

"தமிழக மக்கள் மற்றும் அதிமுக தொண்டர்களின் நலன்களைக் கருத்தில் கொண்டு இதுவரை எனது முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. அவை இனிமேல் தொடரும்" என்று ட்வீட்டில் கூறப்பட்டிருந்தது.

பகவத் கீதையிலிருந்து மேற்கோள் காட்டி, அந்த ட்வீட்டில் “எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது! எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது!! எது நடக்கவிருக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும்!!” என்று அவர் கூறியுள்ளார்.

2021 சட்டமன்றத் தேர்தலுக்கான (Assembly Elections) தனது முதலமைச்சர் வேட்பாளரை கட்சி அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படும் அக்டோபர் 7 ஆம் தேதிக்கு சில நாட்களுக்கு முன்னர் இந்த ட்வீட் வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த சில மாதங்களாக, முதலமைச்சர் வேட்பாளர் தொடர்பாக அதிமுக-வுக்குள் சச்சரவுகள் ஏற்பட்டுள்ளன. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி (K Palanisamy) மற்றும் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் ஆகியோருக்கு ஆதரவாக வெவ்வேறு பிரிவுகள் முளைத்து, அவரவர் தலைவர்கள்தான் முதல்வர் வேட்பாளராக வேண்டும் என பிடிவாதமாக உள்ளனர்.

சில நேரங்களில், OPS க்கு ஆதரவாக சுவரொட்டிகள் மாநிலத்தின் சில பகுதிகளில் ஒட்டப்பட்டன. அமைச்சர்களும் கட்சி செயற்பாட்டாளர்களும் முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து ஊடகங்களுக்கு அறிவிப்புகளை வெளியிட்டனர்.

அறிக்கைகள் மற்றும் சுவரொட்டிகளைத் தவிர, ஆளும் கட்சியில், முதலமைச்சருக்கும் துணை முதல்வருக்கும் இடையில் அதிகாரப் போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது என்பது தெளிவாகியுள்ளது. செப்டம்பர் கடைசி வாரத்தில், ஒரு மாதாந்திர மறுஆய்வுக் கூட்டத்தில், COVID -19 க்கு எதிரான போராட்டத்தில் பல்வேறு திட்டங்களை பட்டியலிட மூத்த அரசாங்க அதிகாரிகள் மற்றும் ஆலோசகர்களுடன் முதல்வர் நடத்திய கூட்டத்தில் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் (O Panneerselvam) கலந்துகொள்ளவில்லை.

ALSO READ: ஒன்றுபட்ட AIADMK தலைமையில் 2021 தேர்தலை சந்திக்க வேண்டும்: கூட்டணி கட்சிகள்

2021 சட்டமன்றத் தேர்தல்களுக்கு முன்னதாக இரு பிளவுகளுக்குள் சமாதானம் ஏற்பட்டு ஒரு தெளிவான நிலைப்பாட்டிற்கு வர கட்சி முயன்று வருகிறது. அதிமுக (ADMK) அதன் மூத்த மற்றும் மிகப் பிரபலமான தலைவரான ஜே.ஜெயலலிதா இல்லாமல் எதிர்கொள்ளும் முதல் சட்டமன்ற தேர்தலாகும் இது. நாடாளுமன்றத் தேர்தல்களில் தேசிய ஜனநாயக கூட்டணியில் போட்டியிட்டு, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் ஒரு நாடாளுமன்ற இடத்தை மட்டுமே அதிமுக பெற்றது என்பது நினைவிருக்கலாம்.

அண்மையில் சென்னையில் உள்ள அவர்களின் தலைமையகத்தில் நடைபெற்ற அதிமுக நிர்வாகக் குழு கூட்டத்தில், 2021 சட்டமன்றத் தேர்தலுக்கான முதலமைச்சர் வேட்பாளரை அறிவிப்பது தொடர்பான சர்ச்சைக்குரிய பிரச்சினை எழுந்தது. இதில் ஏற்பட்ட விவாதத்தில் பழனிசாமி மற்றும் ஓ பன்னீர்செல்வம் முகாம்களின் ஆதரவாளர்களுக்கு இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது.

முந்தைய உடன்படிக்கைக்கு இணங்க, கட்சிக்கு வழிகாட்ட ஒரு வழிநடத்தல் குழுவை அமைக்க வேண்டும் என்று பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார். இருப்பினும், எடப்பாடி பழனிசாமி இந்த கோரிக்கைக்கு உடன்படவில்லை. பன்னீர்செல்வம் பல ஆண்டுகளாக இந்த பிரச்சினையை பற்றி பேசவில்லை. இருப்பினும் இந்தப் பேச்சு இப்போது மீண்டும் வந்துள்ளது.

கட்சியின் செயற்குழு கூட்டத்திற்குப் பிறகு, ஊடகங்களுடன் பேசிய துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி. முனுசாமி, கட்சியின் முதலமைச்சர் வேட்பாளரை பன்னீர்செல்வம் மற்றும் பழனிசாமி ஆகியோர் அக்டோபர் 7 ஆம் தேதி அறிவிப்பார்கள் என்று கூறினார்.

இதற்கிடையில் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் இன்று விடுகைதையைப் போல போட்டுள்ள ட்வீட்டால் அதிமுக முதல்வர் வேட்பாளர் குறித்த யூகங்கள் மற்றும் புரளிகளிகளின் அலை மீண்டும் வீசத் தொடங்கியுள்ளது. இந்த அலை அக்டோபர் 7 அன்று ஓயுமா? 

ALSO READ: தர்மயுத்தம் பார்ட்-2 தொடங்குகிறதா... அதிமுக முதல்வர் வேட்பாளர் அறிவிப்பில் சிக்கல்...?

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News