டெல்லி:ஆர்பிஐ சட்டப்பிரிவு மூலம் ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் சிங் படேலுக்கு அழுத்தம் கொடுக்க மத்திய அரசு தீவிர முயற்சி என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
மத்திய அரசு ஆர்பிஐ சட்டப்பிரிவு 7-ஐ அமலுக்குக் கொண்டு வருவதாக தகவல்கள் வந்துள்ளன. இது மிகப்பெரிய அதிர்வை ஏற்ப்படுத்தும். நாட்டின் பொருளாதாரத்தில் ஏற்பட்டு வரும் சிக்கல்களை மறைப்பதற்க்காகவே ஆர்பிஐ சட்டப்பிரிவு கொண்டு வரப்படுகிறது என்று கடந்த 31 ஆம் தேதி முன்னால் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுருந்தார்.
இந்நிலையில், நேற்று டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் சிங் படேலை ராஜினாமா செய்ய வைக்க மறைமுகமாக மத்திய அரசு அழுத்தம் கொடுத்து வருகிறது. நாட்டின் சுயாட்சி அதிகாரங்கள் கொண்ட அமைப்புகளில் மத்திய அரசு தலையிட்டு வருகிறது. இது அரசியல் ஆதாயத்திற்காக செய்யப்படுகிறது.
ராமர் கோவில் கட்டுவது தொடர்பாக நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றப் போவதாக பாஜக-வினர் கூறி வருகின்றனர். இது அரசியல் சாசனத்திற்கு எதிரானது ஆகும்.
முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் கொண்டுவந்த திட்டங்களை இப்போதைய பாஜக அரசு அத்திட்டத்துக்கு புதிய பெயர் சூட்டி, தாங்கள் கொண்டு வந்த திட்டம் காட்டிக்கொள்கிறது. அதில் ஒன்று "ஜன் தன் திட்டம்". இந்த திட்டம் மூலம் அனைவருக்கும் வங்கி கணக்கு தொடங்க வேண்டும் என முடிவெடுக்கப்பட்டது.
ஆனால் பாஜக அரசு, ஜன் தன் திட்டத்தை கருப்புப் பணத்தை மாற்றிக் கொள்ளவே பயன்படுத்தப்பட்டுள்ளது. ரூபாய் நோட்டு நடவடிக்கையின் போது ஜன் தன் கணக்குகளில் ரூ.42,187 கோடி டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. இந்த பணம் திடீரென எப்படி வந்தது என்று இதுவரை தெரிவேயில்லை என்று ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.