கன்னியாகுமரியை விட்டு விலகி சென்ற ஓகி புயல். திருவனந்தபுரத்தின் மேற்கு திசையில் 230 கி.மீ., தொலைவில் மையம் கொண்டுள்ளது.
கன்னியாகுமரி அருகே ஓகி புயல் உருவாகியுள்ளதால் கடலோர மாவட்டங்களில் மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. கன்னியாக்குமரி பகுதியில் ஓகி புயல் காரணமாக பலத்த காற்று வீசியதால் இதுவரை கிட்டத்தட்ட 300-க்கு மேற்பட்ட மரம் விழுந்துள்ளது. நேற்று முதல் கன்னியாகுமரி அருகே உருவான ஓகி புயல் நகரத்தொடங்கியது. தாண்டவம் ஆடிய ஓகி புயல் இன்று கன்னியாகுமரியை விட்டு விலகிச் சென்றதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருவனந்தபுரத்தின் மேற்கு திசையில் 230 கி.மீ., தொலைவில் தற்போது ஒகி புயல் மையம் கொண்டுள்ளது. ஒகி புயல் விலகிச் சென்றதால் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு இனி பாதிப்பு இல்லை. பயல் சின்னமானது லட்சத்தீவை நோக்கி நகர்ந்து வருகிறது.