மக்களிடம் கோரிக்கை வைக்கும் ஓ.பன்னீர்செல்வத்தின் அறிக்கை!

தமிழக மக்களிடம் ஒரு கோரிக்கையை முன்வைத்து ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.  

Written by - Geetha Sathya Narayanan | Last Updated : Aug 2, 2022, 07:07 PM IST
  • "ஒவ்வொரு வீட்டிலும் மூவர்ணக்கொடி" என்ற இயக்கத்தின் முக்கிய நோக்கம்.
  • ஆகஸ்ட் மாதம் 13 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை ஒவ்வொருவர் வீட்டிலும் மூவர்ணக் கொடி ஏற்றப்பட வேண்டும்.
மக்களிடம் கோரிக்கை வைக்கும் ஓ.பன்னீர்செல்வத்தின் அறிக்கை! title=

பிரதமர் மோடியின் கோரிக்கையை முன்வைத்து தானும் மக்களிடம் கேட்டுக்கொள்வதாக ஓ.பன்னீர்செல்வம் தமிழக மக்களிடம் நேரடி கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார். இது தொடர்பாக அவர் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கூறியிருப்பது என்னவென்றால்,

இந்தியத் திருநாடு சுதந்திரமடைந்து 75 ஆண்டுகள் நிறைவுற இருப்பதன் அடையாளமாக ஆகஸ்ட் 13 முதல் 15 வரை தேசியக் கொடியை அவரவர் இல்லங்களில் ஏற்ற தொண்டர்களுக்கு வேண்டுகோள்

“பாருக்குள்ளே நல்ல நாடு எங்கள் பாரத நாடு" என்று மகாகவி பாரதியாரால் போற்றப்பட்ட இமயம் முதல் குமரி வரையிலான இந்தியத் திருநாடு சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகளை நிறைவு செய்ய உள்ள நிலையில், இந்தியத் திருநாட்டின் பெருமைக்கும், ஒற்றுமைக்கும், உரிமைக்கும், நல்வாழ்வுக்கும் அடையாளமாக இருந்த தேசியக் கொடி குறித்து அனைவரும் அறிந்து கொள்வது இன்றியமையாததாகும்.

மேலும் படிக்க | தந்திரமாக நுழையும் இந்தி - ‘வெறியர்கள்’ என பகிரங்கமாக விமர்சித்த எம்.பி. சு.வெங்கடேசன்!

"தாயின் மணிக்கொடி பாரீர் அதைத் தாழ்ந்து பணிந்து வணங்கிட வாரீர்" என்றார் மகாகவி பாரதியார். காவி, வெண்மை, பச்சை ஆகிய மூவண்ணத்தின் நடுவில் இருபத்து நான்கு ஆரங்களுடன் அசோக சக்கரத்தை நடுவில் கொண்ட தேசியக் கொடி இந்தியத் திருநாட்டின் உயி. இந்தியத் திருநாட்டின்

வலிமையையும், துணிவையும் பறைசாற்றும் விதமாக காவி நிறமும், தூய்மை மற்றும் வாய்மையை உணர்த்தும் விதமாக வெண்மை நிறமும், நாட்டில் உள்ள இயற்கை வளங்கள் அனைத்தையும் குறிப்பதாக பச்சை நிறமும், அறநெறியை நினைவூட்டும் வண்ணம் அசோக சக்கரமும் நம் தேசியக் கொடியில் இடம் பெற்றுள்ளன.

இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவுறுவதை முன்னிட்டு, மூவர்ணக் கொடியை இல்லங்களுக்கு கொண்டு வந்து ஏற்ற மக்களை ஊக்குவிக்கும் வண்ணம் "ஒவ்வொரு வீட்டிலும் மூவர்ணக் கொடி” என்ற பிரச்சாரம் மத்திய அரசினால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சுதந்திர தின விழா மற்றும் குடியரசுத் தின விழா நாட்களில், தனிப்பட்ட முறையில் அல்லாமல், அரசு அலுவலகங்கள், கல்வி நிலையங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடைபெறும் கொடியேற்று விழா நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதுதான் வழக்கம்.

மேலும் படிக்க | தாய்ப்பாலில் நஞ்சைக் கலப்பதா ? - ஆற்றில் ரசாயனக் கழிவுகளை கலக்கும் தொழிற்சாலைகள்!

இந்த ஆண்டு, இந்தியத் திருநாடு சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் பூர்த்தி செய்ய இருப்பதை முன்னிட்டு, தனிப்பட்ட முறையில் மூவர்ணக் கொடியுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொள்ளும் வகையில், தேச வளர்ச்சியை இணைந்து உறுதி செய்யும் ஓர் அடையாளமாக அனைவரும் அவரவர் இல்லங்களில் தேசியக் கொடியை ஏற்ற வேண்டும் என்பதுதான் "ஒவ்வொரு வீட்டிலும் மூவர்ணக்கொடி" என்ற இயக்கத்தின் முக்கிய நோக்கம்.

மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்களும், இந்தியா விடுதலைப்பெற்று 75 ஆண்டுகள் நிறைவு பெற இருப்பதை முன்னிட்டு "ஒவ்வொரு வீட்டிலும் மூவர்ணக்கொடி" என்ற இயக்கத்தை வலுப்படுத்த வேண்டுபென்றும், தேசியக் கொடியுடன் நமக்குள்ள தொடர்பை இந்த இயக்கம் ஆழப்படுத்தும் என்பதால், இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 13 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை ஒவ்வொருவர் வீட்டிலும் மூவர்ணக் கொடி ஏற்றப்பட அல்லது காட்சிப்படுத்தப்பட வேண்டுமென்றும் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News