சென்னை அண்ணாசாலையில் உள்ள டி.எம்.எஸ். வளாகத்தில் 2-ஆயிரத்திற்கும் மேற்பட்ட செவிலியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் பணி நிரந்தரம், ஊதிய உயர்வு போன்ற பல கோரிக்கைகளை முன் வைத்து செவிலியர்கள் மூன்றாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
நேற்று போராட்டத்தில் செவிலியர்களின் பிரதிநிதிகளை அழைத்து அமைச்சர் விஜய பாஸ்கரன் தலைமை செயலகத்தில் பேச்சுவார்த்தை நடத்தினார். மூன்று மணி நேரத்திற்கு மேலாக நீடித்த இந்த பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு ஏற்பட்டதாக அதில் பங்கேற்ற செவிலியர்கள் தெரிவித்தனர்.
மன நிறைவுடன் போராட்டத்தை முடித்துக்கொண்டு, பணிக்கு திரும்புவதாக தெரிவித்துள்ளனர்.
மற்றொரு தரப்பு செவிலியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அரசாணை 191-ஐ வெளியிடும் வரை போராட்டம் தொடரும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இன்று முதல் உண்ணாவிரதத்துடன் போராட்டம் நடத்துவதாக தெரிவித்துள்ளனர்.