தமிழகத்தில் மேலும் 203 பேருக்கு கொரோனா.... மொத்த எண்ணிக்கை 2,526 ஆக உயர்வு!

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு இன்று ஒரே நாளில் 203 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யபட்டுள்ளது!!

Last Updated : May 1, 2020, 06:54 PM IST
தமிழகத்தில் மேலும் 203 பேருக்கு கொரோனா.... மொத்த எண்ணிக்கை 2,526 ஆக உயர்வு! title=

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு இன்று ஒரே நாளில் 203 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யபட்டுள்ளது!!

தமிழகத்தில் இன்று மேலும் 203 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 2,526 ஆக உயர்ந்துள்ளது, கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 28 ஆக உள்ளது. 

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறுகையில்.... தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு இன்றுதான் அதிக பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் ஒரே நாளில் 203 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,526 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் 176 பேருக்கு இன்று கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 
சென்னையில் மொத்தம் 1082 பேருக்கு இதுவரை கொரோனா ஏற்பட்டுள்ளது. இன்று கொரோனா காரணமாக ஒருவர் பலியாகி உள்ளார். கொரோனாவால் பாதிக்கப்பட்ட சென்னையை சேர்ந்த 98 வயது நபர் உயிரிழந்ததால் இதுவரை பலியானவர்கள் எண்ணிக்கை 28ஆக உயர்ந்தது. செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று 8 பேருக்கு கொரோனா உறுதி செய்யபட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று 6 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தில் இன்று ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யபட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று ஒருவருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று 2 பேருக்கு கொரோனா உறுதி செய்யபட்டுள்ளது.

மேலும், கரூர் மாவட்டத்தில் இன்று ஒருவருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில் இன்று 3 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. நாகை மாவட்டத்தில் இன்று ஒருவருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. தஞ்சை மாவட்டத்தில் இன்று 2 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் இன்று ஒருவருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது.

அரியலூர் மாவட்டத்தில் இன்று ஒருவருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று 54 பேர் குணமாகி உள்ளனர். மொத்தமாக 1312 பேர் குணமடைந்து உள்ளனர். இந்தியாவிலேயே அதிகமாக தமிழ்நாட்டில் தான் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 54 சதவிதம் பேர் குணமடைந்துள்ளனர். கொரோனா சோதனையில் தமிழகம் இரண்டாம் இடத்தில் உள்ளது. தமிழகத்தில் கொரோனா சோதனைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இன்று மொத்தமாக 9687 பேருக்கு தமிழகத்தில் கொரோனா சோதனைகள் செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 1.30 லட்சம் பேருக்கு தமிழ்கத்தில் கொரோனா சோதனைகள் செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று மட்டும் 3600 பேருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா பரிசோதனை அதிகரிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இறப்பு விகிதம் 1.1% ஆக உள்ளது. இதுவரை குணமடைந்து உள்ளவர்களின் விகிதம் 52% ஆக உள்ளது.

Trending News