அச்சம் தேவை இல்லை, காவல்துறை உங்களுடன் இருக்கும்: வடமாநில தொழிலாளர்களுக்கு டிஎஸ்பி நம்பிக்கை

யாரும் அச்சப்படத் தேவையில்லை. அனைவருக்கும் முழுமையான பாதுகாப்பு அளிக்கப்படும்: மணியாச்சி டிஎஸ்பி லோகேஸ்வரன்

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Mar 6, 2023, 01:15 PM IST
  • தமிழகத்தில் உள்ள வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வெளியான போலி வீடியோவை தொடர்ந்து, வட மாநிலத் தொழிலாளர்களுக்கு அச்சம் ஏற்பட்டது.
  • இதை அடுத்து தமிழக அரசு சார்பில் வடமாநில தொழிலாளர்களுக்கு முழுமையான பாதுகாப்பு கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
  • இது மட்டுமின்றி, அவர்களுக்கு நம்பிக்கை ஊட்டும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது.
அச்சம் தேவை இல்லை, காவல்துறை உங்களுடன் இருக்கும்: வடமாநில தொழிலாளர்களுக்கு டிஎஸ்பி நம்பிக்கை title=

வட மாநில தொழிலாளர்கள் எந்தமான அச்சமும் இல்லாமல் இருக்கலான் என்றும் காவல்துறை எப்போதும் அவர்களுடன் இருக்கும் என்றும் வடமாநில தொழிலாளர்களுக்கு மணியாச்சி டிஎஸ்பி நம்பிக்கை அளித்துள்ளார்.

தமிழகத்தில் உள்ள வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வெளியான போலி வீடியோவை தொடர்ந்து, வட மாநிலத் தொழிலாளர்களுக்கு அச்சம் ஏற்பட்டது. இதை எடுத்து தமிழக அரசு சார்பில் வடமாநில தொழிலாளர்களுக்கு முழுமையான பாதுகாப்பு கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இது மட்டுமின்றி, அவர்களுக்கு நம்பிக்கை ஊட்டும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை அரசு அடுத்து வருகிறது. குறிப்பாக காவல்துறை மூலமாக வட மாநில தொழிலாளர்களுக்கு நம்பிக்கையும் ஊக்கமும் அளிக்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில் தூத்துக்குடி மாவட்ட எஸ்பி பாலாஜி சரவணன் உத்தரவின் பேரில் ஓட்டப்பிடாரம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் காற்றாலை நிறுவனங்களில் பணியாற்றி வரக்கூடிய வட மாநில தொழிலாளர்களிடம் மணியாச்சி டிஎஸ்பி லோகேஸ்வரன் குறைகளை கேட்டு அறிந்தார்.

மேலும் படிக்க | கடலூர்: பட்டாசு கொட்டகையில் பயங்கர தீ விபத்து..! ஒருவர் பலி - 5 பேர் மருத்துவமனையில் அனுமதி 

மணியாச்சி டிஎஸ்பி லோகேஸ்வரன் தொழிலாளர்கள் மத்தியில் பேசுகையில், 'யாரும் அச்சப்படத் தேவையில்லை. அனைவருக்கும் முழுமையான பாதுகாப்பு அளிக்கப்படும். தமிழக அரசும் காவல் துறையும் உங்களுடன் இருக்கிறது.' என்று கூறினார்.

'அனைவரும் விதிமுறைகளுடன் பணிபுரிய வேண்டும். எந்த பிரச்சனை இருந்தாலும், எப்போது வேண்டுமானாலும் காவல்துறையை தொடர்பு கொள்ளலாம். காவல்துறை உங்கள் நண்பன்' என்று அவர் மேலும் தெரிவித்தார். இ

இந்த நிகழ்ச்சியில் பசுவந்தனை காவல் ஆய்வாளர் சுதேசன், உதவி ஆய்வாளர் சீதாராமன், சிறப்பு உதவி ஆய்வாளர் மார்த்தாண்ட பூபதி ஆகியோர் உடன் இருந்தனர்.

வட மாநில தொழிலாளர்கள் தமிழகத்தில் இந்தி பேசுவதால் அடித்துக் கொல்லப்படுவதாக ஒரு வதந்தி கடந்த சில நாட்களாக இந்தியா முழுவதும் பரவி வருகிறது. பிகார் மாநில பாஜக இதனை மிகப்பெரிய ஆயுதமாக வைத்து தமிழகத்துக்கு எதிரான ஒரு பெரிய சதியை செய்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

மேலும் படிக்க | கடந்த 20 மாதங்களில் 561 திருக்கோயில்களில் குடமுழுக்குகள்: அமைச்சர் சேகர்பாபு 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

 

Trending News