பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ள புதுவை ஆளுநரின் tweet!

சுத்தமான கிராமம் என்ற பெயர் பெராதவரை இலவச அரிசி வழங்கப்பட மாட்டாது  என புதுவை துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளது பெரும் சர்ச்சையினை ஏற்படுத்தியுள்ளது!

Last Updated : Apr 28, 2018, 03:21 PM IST
பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ள புதுவை ஆளுநரின் tweet! title=

சுத்தமான கிராமம் என்ற பெயர் பெராதவரை இலவச அரிசி வழங்கப்பட மாட்டாது  என புதுவை துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளது பெரும் சர்ச்சையினை ஏற்படுத்தியுள்ளது!

புதுச்சேரியில் வறுமைக் கோட்டுக்கு கீழ் வசிக்கும் மக்களுக்கு இலவச அரிசி திட்டம் நடைமுறையில் இருந்து வருகிறது. இந்த இலவச அரிசி வழங்குவது குறித்து துணைநிலை ஆளுநர் கிரண்பேடி சர்ச்சைக்குறிய கருத்தினை வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்த்தில் பதிவிட்டுள்ளதாவது... கிராமங்களில் தூய்மைப் பணியை வலியுறுத்தும் வகையில், தூய்மையான கிராமம் என்ற சான்றிதழனை அக்கிராம நிர்வாகிகளிடம் இருந்து பெற்ற கிராமங்களுக்கு மட்டுமேல இலவச அரிசி வழங்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.

இந்த கருத்திற்கு பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்புகள் எழுந்துள்ளன, எனினும் சிலர் இந்த அறிவிப்பிற்கு பாராட்டுகளை தெரிவித்துள்ளதாகவும் தெரிகிறது. முன்னதாக புதுச்சேரியில் உள்ள மண்ணாடிப்பட்டு கிராம சுகாதார நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட பின்னர் கிரண்பேடி இவ்வாறு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Trending News