கட்டாயம் அசல் டிரைவிங் லைசென்ஸ் அவசியம் இல்லை - சென்னை ஐகோர்ட்

Last Updated : Sep 1, 2017, 01:49 PM IST
கட்டாயம் அசல் டிரைவிங் லைசென்ஸ் அவசியம் இல்லை - சென்னை ஐகோர்ட் title=

செப்டம்பர் 1 முதல் வாகனம் ஓட்டுபவர்கள் ஒரிஜினல் டிரைவிங் லைசென்ஸ் கூட வைத்திருக்க வேண்டும். இல்லையென்றால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை  எடுக்கப்படும், அதாவது 3 மாத சிறை தண்டனையோ அல்லது 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என தமிழக அரசு உத்தரவு பிற்பித்தது.

இந்த உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு லாரி உரிமையாளர் சம்மேளனம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி துரைசாமி, வாகனம் ஓட்டும் போது, ஒரிஜினல் டிரைவிங் லைசென்ஸ் வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை.  ஒரிஜினல் டிரைவிங் லைசென்ஸ் கட்டாயம் நடைமுறைக்கு ஒத்துவராது என நீதிபதி கூறினார்

Trending News