இன்றைய வானிலை முன்னறிவிப்பு: அடுத்த 4 நாட்களுக்கு பலத்த மழை!

தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு பரவலாக மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது!!

Last Updated : Jul 8, 2019, 10:55 AM IST
இன்றைய வானிலை முன்னறிவிப்பு: அடுத்த 4 நாட்களுக்கு பலத்த மழை! title=

தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு பரவலாக மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது!!

தென் மேற்கு பருவக்காற்று மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் நகர்வு காரணமாக, தமிழகத்தில் அடுத்த நான்கு நாட்களுக்கு பரவலாக மழைக்கு வாய்ப்புள்ளதாக  வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

மேலும், தென்மேற்கு பருவமழை காரணமாக மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களான கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், விருதுநகர், நெல்லை மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக் கூடும் என்றும், திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, விழுப்புரம், கடலூர், புதுக்கோட்டை, நாகை மற்றும் காரைக்காலில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

Trending News