சூப்பர் வசதிகளுடன் கூடிய சென்னை - மைசூர் புதிய வந்தே பாரத் ரயில் சேவை!

சென்னை சென்ட்ரலில் இருந்து மைசூரு வழித்தடத்தில் 2வது புதிய வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி குஜராத்தில் இருந்து காணொளி காட்சி வாயிலாக பங்கேற்று தொடங்கி வைத்தார்.

Written by - JAFFER MOHAIDEEN | Last Updated : Mar 12, 2024, 02:12 PM IST
  • பல்வேறு முக்கிய நகரங்களில் இதுவரை மொத்தம் 47 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
  • வாரந்தோறும் புதன்கிழமை மட்டும் இந்த ரயில் இயக்கப்படாது.
  • தமிழகத்திற்கு 6000 கோடி அளவிற்கு ரயில்வே திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது.
சூப்பர் வசதிகளுடன் கூடிய சென்னை - மைசூர் புதிய வந்தே பாரத் ரயில் சேவை! title=

சென்னை சென்ட்ரலில் இருந்து மைசூரு வழித்தடத்தில் 2 வது வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி குஜராத்தில் இருந்து காணொளி காட்சி வாயிலாக பங்கேற்று தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழ்நாடு ஆளுநர் ஆர் என் ரவி ஆகியோர் பங்கேற்று, ரயில் சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

நாட்டின் பல்வேறு முக்கிய நகரங்களில் இதுவரை மொத்தம் 47 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக, தெற்கு ரயில்வேயில், சென்னை சென்ட்ரலில் இருந்து கோவை, மைசூரு, விஜயவாடா ஆகிய நகரங்களுக்கும், சென்னை எழும்பூர் - நெல்லை, திருவனந்தபுரம் - காசர்கோடு உள்ளிட்ட வழித்தடங்களிலும் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

தெற்கு ரயில்வேயில் 3 ரயில்கள் - சென்னை - மைசூரு வந்தே பாரத், மங்களூரு - திருவனந்தபுரம் வந்தே பாரத் மற்றும் கொல்லம் - திருப்பதி விரைவு ரயில் ஆகியவையும் பிரதமரால் இன்று தொடங்கி வைக்கப்பட்டது. இப்போது இயக்கப்படும் வந்தே பாரத் ரயில்களில் இருக்கும் வசதிகளை விட , புதிய வந்தே பாரத் ரயிலில் சில கூடுதல் வசதிகள் இடம் பெறுகிறது.

அதேப் போல சிங்கப்பெருமாள் கோயில், கங்கைகொண்டான், தேனி, பட்டுக்கோட்டை, 
திருத்துறைப்பூண்டி, மற்றும் வள்ளியூர் ஆகிய ரயில் நிலையங்களில் 6 சரக்கு கிடங்குகள் திறந்து வைக்கப்பட்டுள்ளது. மேலும் 200-க்கும் மேற்பட்ட ரயில்வே மேம்பாலங்கள், ரயில் இன்ஜின் பராமரிப்புக்கான 40 பணிமனைகள், 50 மலிவு விலை மருந்தகங்கள் ஆகியவற்றையும் பிரதமர் தொடங்கி வைத்தார்.

சென்னை சென்ட்ரல் - மைசூரு வந்தே பாரத் சேவையானது, 6 மணி நேரம் 25 நிமிடங்கள் பயணிக்கும் என கூறப்படுகிறது. இந்த வந்தே பாரத் ரயில் ஏப்ரல் 4-ம் தேதி வரை சென்னை - பெங்களூரு இடையே மட்டும் இயக்கப்பட்டு, மறுநாள் 5-ம் தேதியில் இருந்து மைசூரு வரை செல்லும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் ரயில் நிலையங்களுடன் 6 மணி நேரம் 25 நிமிடங்களில் இந்த ரயில் பயணிக்கிறது. அதேபோல, வாரந்தோறும் புதன்கிழமை மட்டும் இந்த ரயில் இயக்கப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | ரயில் தாமதம் ஆயிடுச்சா? அப்போ பயணிகளுக்கு ரீபண்ட் கண்டிப்பா கிடைக்கும்.. எப்படி?

நிகழ்ச்சிக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், இந்த நிதி ஆண்டில் மட்டும் தமிழகத்திற்கு 6000 கோடி அளவிற்கு ரயில்வே திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது என்றும், சென்னை சென்ட்ரல்- மைசூர் இடையே 2 வது வந்தே பாரத் ரயிலையும் பிரதமர் தொடங்கி வைத்துள்ளார் என்றும் கூறினார்.

ஸ்டிக்கர் ஓட்டுவதற்கு பெயர் போனது திமுக ஆட்சி என குற்றம் சாட்டிய அவர், பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தில் பயனாளிகளின் வங்கி கணக்கிற்கு நேரடியாக 2,70,000 ரூபாய் வரவு வைக்கப்படுகிறது என்றும், அதேப்போல ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் 22 கோடி பேருக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது என்றார்.

மத்திய அரசு கொண்டு வந்த ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை சிங்கார சென்னை 2.0 என தமிழக அரசு ஸ்டிக்கர் ஒட்டிக் கொள்கிறது. ஸ்டிக்கர் என்றாலே அது ஸ்டாலின், திமுக தான். குடியுரிமை திருத்த சட்டம் குறித்து நடிகர் விஜய் உட்பட அனைவரும் படித்து தெரிந்து கொள்ளுங்கள், யாருக்கு பயன், யாருக்கு எதிராக உள்ளது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் எனவும் அமைச்சர் எல்.முருகன் கூறினார்.

மேலும் படிக்க | பிக்சட் டெபாசிட்டில் பணம் போட திட்டமா? இந்த பாதிப்புகள் ஏற்படலாம் ஜாக்கிரதை!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News