சனிப்பெயற்சியை முன்னிட்டு திருநள்ளாறு கோயிலில் இன்று முதல் புதிய COVID விதிமுறைகள்

இந்த ஆண்டு COVID-19 தொற்று பரவியதால், காரைக்கால் மாவட்ட நிர்வாகம், திருநள்ளாறு கோயிலுக்கு செல்லும் பக்தர்களுக்கு பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 19, 2020, 08:57 PM IST
  • COVID-19 தொற்று பரவியதால், காரைக்கால் மாவட்ட நிர்வாகம் பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
  • பக்தர்கள் முகக்கவசங்களை அணிய வேண்டும்.
  • தனி மனித இடைவெளிக்கான விதிமுறைகள் கோவிலில் கடைபிடிக்கப்பட வேண்டும்.
சனிப்பெயற்சியை முன்னிட்டு திருநள்ளாறு கோயிலில் இன்று முதல் புதிய COVID விதிமுறைகள்   title=

காரைக்கால்: இன்னும் சில நாட்களில் சனிப்பெயர்ச்சி நடக்கவுள்ளது. சனி பகவானின் முக்கிய தலங்களில் திருநள்ளாறு தலத்துக்கு அதிக முக்கியத்துவம் உள்ளது.

ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கான மக்கள் சென்று வழிபடும் இத்தலத்தில் சனிப்பெயர்ச்சி மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது. இவ்வாண்டிற்கான சனிப்பெயர்ச்சி இன்னும் சில நாட்களில் நடக்கவுள்ள நிலையில், புதுச்சேரியில் உள்ள திருநள்ளாறு சனீஸ்வரன் கோயிலில்,

இதற்கான புதிய விதிமுறைகள் மற்றும் நுழைவு கட்டுப்பாடுகள் சனிக்கிழமை முதல் நடைமுறைக்கு வந்தன. காரைக்கால் மாவட்டத்தில் உள்ள இந்த கோயில் சனீஸ்வரருக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.

சனி பகவான் ஒரு இராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு மாறும் நிகழ்வு 'சனிப்பெயர்ச்சி’ திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. இது இரண்டரை ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறுகிறது. 2017 இல் இதற்கு முந்தைய சனிப்பெயற்சி நடந்தது. இந்த முறை, சனிப்பெயர்ச்சி திருவிழா டிசம்பர் 27 (ஞாயிற்றுக்கிழமை) அன்று நடைபெற உள்ளது. இந்த விழாவில் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பல லட்சம் பக்தர்கள் சனிபகவானை தரிசனம் செய்ய வருகிறார்கள்.

எனினும், இந்த ஆண்டு COVID-19 தொற்று பரவியதால், மாவட்ட நிர்வாகம் பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. புதிய விதிமுறைகள் இன்று (டிசம்பர் 19) முதல் 2021 பிப்ரவரி 14 வரை செயலில் இருக்கும் என்று மாவட்ட ஆட்சியர் அர்ஜுன் சர்மா தெரிவித்தார்.

ALSO READ: 2.6 கோடி ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.2500, பொங்கல் பரிசு: தமிழக முதல்வர்

அதன்படி, வார இறுதி நாட்களில் கோயிலுக்கு செல்ல விரும்பும் பயணிகள் கோயிலின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான https://thirunallarutemple.org/sanipayarchi/ -ல் பதிவு செய்ய வேண்டும்.

"செல்லுபடியாகும் பதிவு கடிதம் உள்ளவர்கள் மட்டுமே டிசம்பர் 19 முதல் பிப்ரவரி 14 வரை சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள்" என்று கலெக்டர் தெரிவித்தார்.

"பக்தர்கள் முகக்கவசங்களை (Face Mask) அணிய வேண்டும். கோயிலுக்குள் நுழையும் இடத்தில் அனைவருக்கும் தெர்மல் ஸ்கேனிங் செய்யப்படும். தனி மனித இடைவெளிக்கான (Social Distancing) விதிமுறைகள் கோவிலில் கடைபிடிக்கப்பட வேண்டும். பக்தர்கள் எந்த கோவில் குளத்திலும் புனித நீராட அனுமதிக்கப்பட மாட்டார்கள். அர்ச்சனைகளும் சிறப்பு பூஜைகளும் செய்யப்படாது” என்று கலெக்டர் மேலும் கூறினார்.

மேலும், 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் மற்றும் நோயுற்ற பெரியவர்கள் இந்த முறை கோயிலுக்கு வருவதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கோயில் நிர்வாக அதிகாரி ஆதர்ஷ், காரைக்கால் (Karaikal) மாவட்ட மூத்த போலீஸ் சூப்பிரண்டு நிஹாரிகா பட் மற்றும் மாவட்ட ஆட்சியர் அர்ஜுன் சர்மா ஆகியோர் சனிக்கிழமை நகரில் நடந்த விழா ஏற்பாடுகளை ஆய்வு செய்தனர். இணையதளத்தில் பதிவு செய்த ஏராளமான பக்தர்கள் இன்று கோயிலுக்கு வந்தனர். 

ALSO READ: மார்கழி 4 ஆம் நாள்: திருப்பாவை பாடலின் பொருள், பூஜைக்கான நல்ல நேரம்!!

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News