நாகப்பட்டினம் மாவட்டம் நாகூரை அடுத்த அமிர்தா நகர் பகுதியைச் சேர்ந்தவர்கள் சுப்பிரமணி, சித்ரா தம்பதி. இவர்களின் மூன்றாவது மகள் சுபாஷினி. இவர் நாகை அடுத்துள்ள பாப்பாக்கோவில் தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு பிசியோதெரபிஸ்ட் பயின்று வந்தார். இந்த நிலையில் முதலாம் ஆண்டு கடைசி பருவ தேர்வு வருவதால் கல்லூரி நிர்வாகம் அவர் பாக்கி வைத்த 55 ஆயிரம் ரூபாய் கல்விக் கட்டணத்தை உடனடியாக கட்ட வேண்டுமென வற்புறுத்தி உள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், பணம் கட்டாத மாணவிகளைக் கட்டாய விடுப்பு அளித்ததுடன் கல்லூரிக்கு வந்த மாணவிகளை வகுப்பறையின் வெளியே நிற்க வைத்து அவமதித்ததாகவும் சொல்லப்படுகிறது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான மாணவி சுபாஷினி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நாகூர் போலீசார் மாணவியின் உடலை கைப்பற்றி நாகப்பட்டினம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். மாணவியின் இறப்பை தொடர்ந்து ஆத்திரமடைந்த உறவினர்கள் நாகூர்-நாகை தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அதனையடுத்து நாகை டிஎஸ்பி சரவணன் தலைமையிலான போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.
மேலும் படிக்க | Viral Video: பணம் கேட்டு மிரட்டல்... திமுக கவுன்சிலரின் கணவரை தெறிக்கவிட்ட பெண்!
கல்வி கட்டணத்தை கட்ட சொல்லி தொல்லை கொடுத்து, மாணவி தற்கொலைக்கு காரணமாக இருந்த கல்லூரி நிர்வாகம் மற்றும் தாளாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உறவினர்கள் வலியுறுத்தியுள்ளனர். பேச்சு வார்த்தையின் முடிவில் போராட்டம் கைவிடப்பட்டது. மாணவியின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. கல்விக் கட்டணம் கட்ட சொல்லி கல்லூரி நிர்வாகம் வற்புறுத்தியதாகக் கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நாகையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க | Crime: கள்ளக் காதல் விவகாரம்; மனைவியை கொன்று புதைத்த கணவன்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR