அனுமதி இன்றி லாரியில் ஜல்லி ஏற்றிவந்த நாம் தமிழர் கட்சி ஒன்றிய செயலாளர் கைது!

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே நாம் தமிழர் கட்சியின் வடக்கு ஒன்றிய செயலாளர் நவீன் எபிராஜ் அனுமதி சீட்டும் இல்லாமல் ஜல்லிகற்களை கொண்டு வந்ததாக கைது செய்யப்பட்டுள்ளார்.  

Written by - RK Spark | Last Updated : Feb 27, 2024, 10:09 AM IST
  • அனுமதி இன்றி ஜல்லிக்கற்களை ஏற்றி வந்த நிர்வாகி.
  • காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
  • மேலும் லாரியை பறிமுதல் செய்துள்ளனர்.
அனுமதி இன்றி லாரியில் ஜல்லி ஏற்றிவந்த நாம் தமிழர் கட்சி ஒன்றிய செயலாளர் கைது! title=

அரசின் அனுமதி இன்றி லாரியில் அதிக பாரத்தோடு ஜல்லிக்கற்களை ஏற்றி வந்த நாம் தமிழர் கட்சியின் ஒன்றிய செயலாளர் அதிரடி கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், ஜல்லி கற்களுடன் லாரி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.  தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள அம்பலசேரி கிராமத்தின் அருகே சாத்தான்குளம் வட்டாட்சியர் இசக்கி முருகேஸ்வரி தலைமையிலான வருவாய்த் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது திருவரங்கநேரி கிராமத்தை சேர்ந்த நாம் தமிழர் கட்சியின் சாத்தான்குளம் வடக்கு ஒன்றிய செயலாளர் நவீன் எபிராஜ் என்பவர் அந்தப் பகுதியில் லாரியில் அரசின் எந்தவித அனுமதி சீட்டுமின்றி லாரியில் ஜல்லி கற்களை கொண்டு வந்ததாக கூறப்படுகிறது. 

மேலும் படிக்க | லண்டன் வீட்டில் வாடகைக்கு இருக்கும் பிரபாஸ்! இவ்வளவு பெரிய ஸ்டாருக்கு இப்படியொரு நிலைமையா..

அப்போது ரோந்து பணியில் இருந்த வட்டாட்சியர் அந்த லாரியை தடுத்து நிறுத்தி சோதனையிட்ட போது அதில் தமிழக அரசின் எந்தவித அனுமதி சீட்டும் இல்லாமல் ஜல்லிகற்களை கொண்டு வந்தது தெரிய வந்தது. இதனை அடுத்து வருவாய்த்துறை அதிகாரிகள் அந்த லாரியை சாத்தான்குளம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். தொடர்ந்து கட்டாரிமங்கலம் கிராம நிர்வாக அலுவலர் வேல்முருகன் அளித்த புகாரின் பேரில் சாத்தான்குளம் போலீசார் 379, 21 (4) M&M (DR) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து லாரியை ஓட்டி வந்த நாம் தமிழர் கட்சியின் வடக்கு ஒன்றிய செயலாளர் நவீன் எபிராஜ் என்பவரை கைது செய்து ஸ்ரீவைகுண்டம் கிளை சிறையில் 15 நாள் நீதிமன்ற காவலில் அடைத்தனர்.  நாம் தமிழர் கட்சியின் ஒன்றிய செயலாளர் அரசின் அனுமதியின்றி ஜல்லி கற்களை கொண்டு வந்ததாக கைது செய்யப்பட்ட விவகாரம் சாத்தான்குளம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சீமான் கண்டனம்

முன்னதாக பரந்தூரில் புதிய வானூர்தி நிலையம் அமைப்பதற்கு நிலம் எடுக்கும் திமுக அரசின் உத்தரவுக்கு எதிராக போராடிய மக்களை கைது செய்திருப்பது அரச பயங்கரவாதம் என சீமான் கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார்.  பரந்தூரில் புதிய வானூர்தி நிலையம் அமைப்பதற்கு நிலம் எடுக்க தமிழ்நாடு அரசு அனுமதியளித்திருப்பது வன்மையான கண்டனத்துக்குரியது. நிலம் எடுக்கும் உத்தரவை எதிர்த்து போராடிய மக்களை திமுக அரசு கைது செய்திருப்பது கொடுங்கோன்மையாகும்.  காஞ்சிபுரம் மாவட்டம், பரந்தூரில் 4550 ஏக்கர் பரப்பளவில் புதிய வானூர்தி நிலையம் அமைப்பதற்காக, ஏகனாபுரம் உட்பட 13க்கும் மேற்பட்ட கிராமங்களில் 3250 ஏக்கர் விளைநிலங்களையும், 30க்கும் மேற்பட்ட நீர்நிலைகளையும், ஆயிரக்கணக்கான மக்கள் குடியிருப்புகளையும் அழித்து,  நிலங்கள் கையகப்படுத்தப்படுவதற்கு  அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பினைத் தெரிவித்து,  டந்த ஒன்றரை ஆண்டிற்கும் மேலாக போராடி வருகின்றனர். 

ஆனால், திமுக அரசு போராடும் மக்களின் உணர்வையும், உரிமையையும் சிறிதும் மதியாது, ஆட்சி அதிகாரத் துணைகொண்டு மக்கள் போராட்டங்களை ஒடுக்கி வருகின்றது. அதன் ஒரு பகுதியாக இன்று (26.02.2024) புதிய வானூர்தி நில எடுப்பு அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற ஏகனாபுரம் பெண்கள், முதியவர்கள், விவசாயிகள் உட்பட பொதுமக்களை திமுக அரசு கட்டாயப்படுத்தி கைது செய்திருப்பது அரச பயங்கரவாதமாகும். விளை நிலங்களை அழிக்கும் திட்டங்களை தொடர்ந்து மக்கள் எதிர்த்து வரும் நிலையில் எதிர்க்கட்சியாக இருந்தபோது மக்களோடு நிற்பது போல் நாடகமாடிய திமுக, ஆட்சிக்கு வந்த பிறகு அடைக்கி ஒடுள்ளி கைது செய்திருப்பது நம்பி வாக்களித்த மக்களுக்கு செய்கின்ற பச்சைத்துரோகமாகும். 

சனநாயக நாட்டில் அமைதியான முறையில் அறவழியில், மக்கள் போராட்டங்களை முன்னெடுப்பதும், குரலற்ற எளிய மக்களின் போராட்டத்திற்குத் தோள்கொடுத்துத் துணைநிற்பதென்பதும் அரசியலமைப்பு வழங்கியுள்ள அடிப்படை உரிமையாகும். அதற்குக்கூட அனுமதிமறுத்து திமுக அரசு கைது செய்வதென்பது வெட்கக்கேடானதாகும்.  மக்களாட்சி, கருத்துச் சுதந்திரம், பேச்சுரிமை குறித்தெல்லாம் மேடைக்கு மேடை பேசும் திமுக புகழ்பாடிகள் என்ன இதற்கு என்ன பதில் கூறப்போகிறார்கள்? இதுதான் திராவிட மாடலா? இதுதான் சமூக நீதியா? திமுகவின் இத்தகைய அடக்குமுறைகள் தொடர்ந்தால் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக அரசிற்கும், இந்திய ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசிற்கும் பரந்தூர் பகுதி மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள். எனவே, தமிழ்நாடு அரசு கைது செய்யப்பட்டுள்ள ஏகனாபுரம் பொதுமக்களை எவ்வித வழக்கும் பதியாமல் உடனடியாக விடுவிக்க வேண்டுமெனவும் தங்களின் நில உரிமைக்காகப் போராடும் மக்களின் கோரிக்கைக்கு தமிழ்நாடு அரசு உடனடியாக செவி சாய்க்க வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.

மேலும் படிக்க | ‘மீண்டும் மீண்டுமா..’ ரசிகர் கொடுத்த பொன்னாடையை தூக்கியெறிந்த சிவகுமார்..வைரல் வீடியோ!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News