சென்னை மயிலாப்பூர் துவாரகா காலனியில் வசித்து வந்தவர் ஆடிட்டர் ஸ்ரீகாந்த். தொழிலதிபரான இவர் குஜராத் மாநிலத்தில் ஐ.டி நிறுவனம் நடத்தி வந்தார். இவரது மனைவி அனுராதா. இவர்களுக்கு சஸ்வத் என்ற மகனும் சுனந்தா என்ற மகளும் உள்ளனர். இருவரும் அமெரிக்காவில் வசிக்கின்றனர்.
இருவரையும் பார்க்க ஸ்ரீகாந்த் மனைவியுடன் கடந்த 3 மாதங்களுக்கு முன் அமெரிக்கா சென்றார். இந்நிலையில், கடந்த வாரம் ஸ்ரீகாந்த்,அனுராதா இருவரும் சென்னை திரும்பினர். பின்னர், விமான நிலையத்தில் இருந்து கார் மூலம் மயிலாப்பூர் வீட்டுக்கு வந்தனர். நேபாள நாட்டைச் சேர்ந்த வாடகை கார் ஓட்டுநர் கிருஷ்ணா என்ற பதம்லால் கிருஷ்ணா காரை ஓட்டி வந்தார். இவர், ஸ்ரீகாந்தின் பண்ணை வீட்டில் 20 ஆண்டுகளாக காவலாளியாகப் பணியாற்றி வரும் லால்சர்மாவின் மகன் என்பதால் ஸ்ரீகாந்துக்கு தேவைப்படும் போதெல்லாம் அவருக்காக கார் ஓட்டி வந்துள்ளார். இதற்கிடையே ஸ்ரீகாந்த், கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள தனது சொத்து ஒன்றை ரூ.40 கோடிக்கு விற்பனை செய்துள்ளார்.
இந்தப் பணத்தைக் கொள்ளையடிக்க தனது நண்பரான மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ரவி என்ற ரவிராய் என்பவரிடம் சேர்ந்து 3 மாதங்களுக்கு முன்பே திட்டமிட்டுள்ளார் கிருஷ்ணா. அதன்படி கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள ஸ்ரீகாந்த்பண்ணை வீட்டில், கடந்த 3 நாட்களுக்கு முன் குழிதோண்டி தயாராக வைத்துள்ளனர். அமெரிக்காவிலிருந்து வீடு திரும்பிய ஸ்ரீகாந்த் மற்றும் அவரது மனைவி அனுராதா இருவரையும் கட்டையால் தாக்கியும் கழுத்தில் கத்தியால் குத்தியும் கொலை செய்து சடலத்தை ஸ்ரீகாந்த் காரிலேயே கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள பண்ணை வீட்டுக்கு எடுத்துச் சென்று ஒரே குழியில் போட்டு புதைத்துள்ளனர்.
சொத்து விற்ற அதில் வரும் தொகையான ரூ.40 கோடியை ஸ்ரீகாந்தின் வீட்டில் தேடியபோது பணம் அங்கு இல்லை. இதனால் அங்கிருந்த 1,000 பவுன் நகை உட்பட ரூ.5 கோடி மதிப்புள்ள நகைகளை சூட்கேஸில் எடுத்துக் கொண்டு ஸ்ரீகாந்தின் காரிலேயே நேபாளம் தப்பிச் செல்ல முயன்றனர். இந்நிலையில், கொள்ளையர்கள் இருவரையும் ஆந்திராவில் வைத்து அம்மாநில போலீஸார் உதவியுடன் 6 மணி நேரத்தில் சென்னை போலீஸார் கடந்த வாரம் கைது செய்து சென்னை புயல் சிறையில் அடைத்தனர்.
மேலும் படிக்க | மைலாப்பூர் இரட்டை கொலை - குற்றவாளியின் பரபரப்பு வாக்குமூலம்..!
இந்த நிலையில் குற்றவாளிகள் 2 பேரையும் இன்று சைதாப்பேட்டை நீதிபதி நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தி விசாரிக்க அனுமதி கோரினர். அதனைத் தொடர்ந்து குற்றவாளிகள் 2 பேருக்கும் 5 நாள் போலீஸ் காவல் அளித்து சைதாப்பேட்டை 23வது நடுவர் மன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
மேலும் படிக்க | பட்டமளிப்பு விழாவில் பத்திரிகையாளர்களுக்கு ரூ.500 லஞ்சம்..!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR