சென்னை: தி.மு.க -வின் முரசொலி அறக்கட்டளை வளாகம் பஞ்சமி நிலத்தில் கட்டப்பட்டுள்ளதாக பாமக நிறுவனா் ராமதாஸ் கருத்து கூறியிருந்தார். இது பெரும் விவாததுக்கு உள்ளானது. ராமதாசின் கருத்து பா.ஜ.க தரப்பு ஆதரவு காட்டப்பட்டது. பஞ்சமி நிலம் பற்றி பா.ஜ.க மாநிலச் செயலாளர் ஸ்ரீனிவாசன் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் புகார் செய்தார். இதனையடுத்து தாழ்த்தப்பட்டோர் ஆணையம் முன் ஆஜரான திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி விளக்கங்களை அளித்தார்.
இந்தநிலையில், முரசொலி நிலம் குறித்து பாஜக மாநிலச் செயலாளர் டாக்டர் ஆர்.சீனிவாசன் அவதூறு பரப்பியது தொடர்பாக, திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்.பி., வக்கீல் நோட்டீஸ் அனுபியுள்ளார். அதேபோல முரசொலி அலுவலகம் அமைந்துள்ள இடம் பஞ்சமி நிலம் எனக் குறிப்பிட்டதற்காக பாமக நிறுவனா் ராமதாஸ் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், அப்படிக் கேட்காவிட்டால் அவதூறு வழக்கு தொடுக்கப்படும் என்றும் திமுக சார்பிலும் அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
அதுக்குறித்த அறிக்கையில் கூறியதாவது,
டாக்டர் ராமதாஸ், முரசொலி இடம் குறித்து, தான் பதிவிட்ட டிவிட்டர் பதிவுகளை, நோட்டீஸ் கிடைத்த 24 மணி நேரத்தில் நீக்கிவிடவேண்டும் என்றும், 48 மணி நேரத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரவேண்டும் என்றும், வருங்காலத்தில் இது போன்ற அவதூறான பதிவுகளைப் பதிவிடக்கூடாது என்றும் நோட்டீஸில் கோரப்பட்டுள்ளது, தவறும் பட்சத்தில், முரசொலி அறக்கட்டளை சார்பாக ஆர்.எஸ்.பாரதி எம்.பி., அவர்களால் ரூபாய் ஒரு கோடி நஷ்ட ஈடு கேட்டு சிவில் நீதிமன்றத்தில் டாக்டர் இராமதாஸ் மீது வழக்கு தொடுக்கப்படும் எனவும், அவதூறு குற்றத்திற்காக குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் எனவும், வழக்கறிஞர் நீலகண்டன் அனுப்பிய நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முரசொலி நிலம் குறித்து பாஜக மாநிலச் செயலாளர் டாக்டர் ஆர்.சீனிவாசன் அவதூறு பரப்பியது தொடர்பாக, திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்.பி. அனுப்பியுள்ள வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
அதன் விவரங்கள் பின்வருமாறு: