கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே உள்ள சு.ஒகையூர் கிராமத்தை சேர்ந்த அலமேலு (50) என்பவர் தன் குடும்ப கஷ்டத்திற்காக இன்றைக்கும் கிராமத்தில் இட்லி விற்று வருகிறார்.
இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வசதிக்கேற்ப பிடித்ததை ஆர்டர் செய்யவும், பிடிக்காததை டெலிட் செய்யவும் என நவீன உலகமாக மாறிவிட்டது. ஆனால் இன்றும் இட்லியோ இட்லி என்ற ஒலி சு.ஒகையூர் கிராமத்தில் இன்றும் கேட்டுக்கொண்டுதான் இருக்கிறது.
மனிதன் சம்பாதிப்பதே நல்ல உணவு சாப்பிடுவதற்காக தான் போராடி வருகிறான், எவ்வளவு செலவு பண்ணினாலும் பரவாயில்ல நல்ல உணவு சாப்பிட வேண்டும், அதற்கு ஒரு நல்ல ஹோட்டல் சொல்லு என நாம் அடிக்கடி இந்த வார்த்தைகள் கேட்பது வாழ்வில் இன்றியமையாத வசனமாக மாறிவிட்டது. இருந்தபோதிலும் ஆர்டர் செய்த ஐந்து நிமிடத்தில் வீட்டு வாசலில் பார்சல் நிற்கும் இந்த 2k kits காலத்தில் தான் இட்லியோ இட்லி என கிராமத்தில் ஒலித்துக்கொண்டிருக்கிறது.
வடகிழக்கு பருவ மழை பெய்த போதிலும் ஆவி பறக்க சூடான இட்லியும்,இரண்டு வகை சட்னியும் காலை 7:00 மணிக்கே ரெடி பத்து ரூபாய்க்கு இரண்டு இட்லின்னா கூட, அதற்கு சட்னி-சாம்பார் உண்டு ஆனாலும், நாலு இட்லி வாங்கினால் ஒரு இட்லி இலவசம் அதுதான் நமக்கு சந்தோசம், மேலும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஆரோக்கியமான இட்லியை அன்பால் கொடுக்கும் இந்த அம்மாவின் இட்லியை சாப்பிட்டுவிட்டு வேலைக்குச் செல்வது தான் வேலை, வேற என்ன வேலை !!
தன் பணியை காலை 7 மணிக்கு தொடங்கி 10 மணி வரை பம்பரமாய் சுழலும் அலமேலு அம்மாவுக்கும் ஆழ்ந்த மனக்கஷ்டங்கள் இருக்கு, அலமேலு அம்மாவின் மூத்த மகள் கணவன் உயிரிழந்ததால் பேரக் குழந்தைகளுக்காவும் தன் ஊனமுற்ற இளைய மகனுக்காவும் 50 வயதிலும் இட்லி விற்று போராடி கொண்டிருக்கிறார் என்பதே நிதர்சனம்.
தன் மகன் ஆறுமுகம் மாற்றுத்திறனாளி, ஆசிரியர் பயிற்சி முடித்து இருந்தாலும் வேலை கிடைக்கவில்லை. வேலை இல்லாததால், திருமணம் நடக்கவில்லை. வேறு வருமானமே இல்லாத நிலையில் இட்லி விற்று குடும்பம் நடத்துகிறோம் என்று சொல்லும் அலமேலு அம்மா, தமிழக முதல்வர் அவனது படிப்புக்கு ஏற்ற வேலை கொடுத்தால், திருமணம் செய்து வைப்பேன், வாழ்க்கையும் கிடைக்கும் என்று கண்கலங்க கோரிக்கை விடுக்கிறார்.
அலமேலு அம்மாவின் கோரிக்கை நிறைவேறுமா? தமிழக முதல்வர் நிறைவேற்றுவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். மாற்றுத் திறனாளி ஆறுமுகத்திற்கு, விடியல் ஆட்சியால் விடியல் வாழ்வு கிடைக்குமா? காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.
Also Read | செல்போனில் கேம் விளையாடிதை கண்டித்ததால் மாணவர் எடுத்த விபரீத முடிவு!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR